அந்திப்பொழுது
புள்ளினம் கூடு திரும்பும் பொழுது
மல்லிகை மொட்டவிழ்க்கும் பொழுது
வண்டுகள் வட்டமிடும் பொழுது
வெட்கம் வந்ததோ
ஆதவனே உனக்கு!
பறவைகள் பிரிந்து செல்லும் பொழுது
மல்லிகை மணமிழக்கும் பொழுது
வண்டுகள் மயக்கம் தீரும் பொழுது
கோபம் வந்ததோ
வெண்ணிலவே உனக்கு!
ஞாயிறும் திங்களும்
இணைய மறுப்பது ஏனோ?
சுட்டெரிக்கும் கனலோ
சுகமளிக்கும் குளிரோ
நிரந்தரமில்லை என்பது
உணர்த்தவோ?
விழுந்தவன் எழுவான்
என்ற எண்ணம்
மனிதன் மனதில்
வேரூண்றவோ?
கடமை தவறாது
காரியம் ஆற்றும்
கண்ணியம்
கற்பிக்கவோ?
எதனால் என்பது
நானறியேன்!
நீங்கள் இருவரும்
சந்திக்கும் பொழுது
இவ்வுலகம்
புதுப்பொலிவு பெற்று
உற்ற சோகம் மறந்து
உவகை வெள்ளத்தில்
மிதப்பது மட்டும் அறிவேன்!!