ரத்தத்தின் ரத்தமே

Ramya அக்கா..😍

என் முன்னால் பிறப்புமட்டுமின்றி வாழ்நாள் முழுதும் நிற்பவள்..

என் ஆபத்தை கண்டு கதறும் இடத்தில் நீ அன்னை, என்னை காக்க களத்தில் நிற்கும் இடத்தில் நீ தந்தை..

அம்மா பாசம் ஊட்ட,அப்பா அறிவை ஊட்ட நீயோ அணைத்துமாகி நிற்கிறாய் என் அருகில்...

குழந்தைபருவம் முதல் ஒன்றாக விளையாடி-வாயாடி,சண்டையிட்டு-சமாதானம்பட்டு,உண்டு-உறங்கி ஒன்றாகவே வாழ்ந்தோம்-வளர்ந்தோம்.

நீ மணமுடித்து மறுவீடு செல்லும்வரை, அன்றும் நான் அறியவில்லை, நாட்கள் செல்ல செல்ல , என் அருகில் இருந்த நிழல் அகன்றது போல, தண்டவாளம் தனித்து சென்றது போல, எங்கள் வீட்டு தாமரை குளம் விட்டு அக்கரை குளம் சென்றார் போல்.... போதும் வார்த்தைகள்,வரிகள் பத்தாது அந்த வலியை விவரிக்க .....

ஆனால் உன் வாழ்வு சிறப்பாய் அமைந்ததின் பலனாய் ,ரத்தத்தின் ரத்தமான உன் மகன் என்னை மாமா என அழைக்கும் அந்த தருணம் வலி அனைத்தும் ஆற்றி ஆனந்தம் தருகிறது....

எதிர் எதிர் துருவம் நாம் ,ஆனாலும் எனக்கு வழிகாட்டிய கலங்கரை விளக்கம் நீதானே..

என் தமிழாற்றலுக்கும் மற்ற திறன்களுக்கும் திறவுகோல் நீயே.. இருந்தும் பலமுறை நீயே கேட்டும் உனக்கு ஒரு காவியம் எழுத என்னுள் ஓர் தடுமாற்றம் காரணம் , எனக்கு இவ்வளவு செய்த உனக்கு ஒன்றும் செய்யாமல் எழுத மனம் ஒப்புக்கொள்ளவில்லை ..இன்று சிறியதாய் முற்றும் என் முயற்சியில் உனக்கு ஒன்று செய்துவிட்டேன்(நீ அறிவாய்) என்ற நிறைவோடு நிறைவாக எழுதுகிறேன்...

கர்வம்,ஆணவம்,வீரம்,விவேகம் கொண்ட என்னை வீழ்த்தும் வல்லமை கொண்ட இரண்டாம் கண்ணீரே
(அன்னைக்கு அடுத்து)..

வாழ்க பல்லாண்டு..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரம்யா 😍

- மணிவேல் முருகன்

எழுதியவர் : மணிவேல் (18-Feb-19, 7:53 am)
சேர்த்தது : மணிவேல்
பார்வை : 196

மேலே