பகவத் கீதா வெண்பா பக்தியோகம் 1 சுலோகம் 1 2
அருச்சுனன் பகர்ந்தது :
1 .
உருவாய் உனைஉபாசிக் கும்யோக பக்தன்
அருவாய் அழிவற்ற ஓர்பரமாய் காண்போன்
இருவரில் யாருயர்ந் தோன் ?
கண்ணன் சொன்னது :
2 .
என்னில் மனம்வைத்து யோகத் தினில்நிற்பான்
தன்னில் உயர்சிரத்தை சிந்தனையால் எண்ணுவோன்
என்கருத்தில் மேலோன் அவன் !
----கீதன் கவின் சாரலன்