காதல்

d

உந்தன் புன்னகையால் என்னை நீ
உந்தன் இதயத்தில் பூட்டிவைத்தாய்
உந்தன் புன்னகையோ என்ன விலை
நானறியேன் அதை உனக்கு தந்து
என்னை , இந்த உந்தன் கைதியை
மீட்டுக்கொள்ள என்றேன் அதற்கு
காதலியவள் சொன்னாள், " என்னவனே
உந்தன் பார்வை ஒன்றே போதுமடா
என் மீது நீ தொடுத்தால் என் இதயமது
திறந்து கொள்ளும் நீ வெளியே வந்திடலாம்
என்இதத்தை விட்டு விட்டு , ஆனால் அப்போது
என்எதிரே நின்றிடவேண்டும் நான் பார்த்து மகிழ்ந்திட
என்றும் என்னவனாய் எனக்குமட்டுமே என்னவனாய் "
என்றாளே அவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Feb-19, 9:34 am)
Tanglish : kaadhal
பார்வை : 522

மேலே