சுமதி என் சுந்தரியே
முகத்தில் சில சுருக்கங்கள் மெல்லத் தோன்றிடினும்
------------------------------------------------------------------சுமதி என் சுந்தரியே
முத்துப்பல் கோணாமல் முல்லையாய் இன்றும் சிரிக்கும்
------------------------------------------------------------------------சுமதி என் சுந்தரியே
பொட்டு வைத்த முகமும் புன்னகை இதழுமாய் காபியுடன் காலை வரும்
---------------------------------------------------------------------------சுமதி என் சுந்தரியே
பட்டுடுத்தி பவளயிதழ்ப் பூமலர காலை இளவேனில் தென்றல்
-------------------------------------------------------------------------சுமதி என் சுந்தரியே
மெட்டியொலிக்க பொட்டு சிவந்த பூமுகத்துடன் காலை நேர கற்பூர ஜோதியாய்
-------------------------------------------------------------------------சுமதி என் சுந்தரியே
நதியோரத்து முதியோரில்லத்தில் நாளும் காலையில் இணைந்து நடை பயிலும்
--------------------------------------------------------------------------சுமதி என்றும் என் சுந்தரியே !

