ரேனுஸ்ரீ-பகுதி 7

வினாக்களுக்கு விடை தெரியாமல் வீட்டிற்கு சென்றேன்.

அன்று இரவு உறக்கமின்றி வலப்புறமும்,இடப்புறமும் மாறி மாறி திரும்பி படுத்தபடி இருந்தேன்,தொண்டை வறண்டது போல இருந்தது நீர் குடிப்பதற்காக சமையல் அறைக்கு சென்றேன்,என் தந்தை டிவி பார்த்துக்கொண்டிருந்தார்,அவர் தினமும் செய்திகள் பார்த்துவிட்டே உறங்குவது.

என்னடா தூங்கலையா என்று கேட்டார்.

தூக்கோ வரல பா என்று கூறினேன்.

எதையு யோசிக்காம கண்ண மூடி படு தூக்கோ தான வரு என்று கூறினார்.

ம்ம்.....தண்ணி குடுச்சுட்டு போய் தூங்கற பா என்றேன்.

அப்படியே எனக்கோ கொஞ்சோ தண்ணி கொண்டுவாமா என்றார்.

சரி பா என்றேன்.

நீர் கொண்டு வந்து என் தந்தைக்கு கொடுத்து விட்டு நானும் குடித்தேன்,பின்பு அவர் தொழில் சாய்ந்தபடி அவர் அருகே அமர்தேன்.

மணி 10 .30 ஆகுது,இன்னொ தூங்காம இருக்க,குறஞ்சபட்சோ எட்டு மணி நேரமாவது தூங்கனு,அப்ப தா உடம்பு ஆரோக்கியமா இருக்கோ,இந்த வயசுலதா நிம்மதியா படுத்து தூங்க முடியு,அப்பரோ நீயே தூங்கனோனு ஆசபட்டாலு சரியான தூக்கோ இருக்காது.
எல்லா உயிரினங்களுக்கு உணவு,உறக்கம் இது ரெண்டோ ரொம்பவே முக்கியமானது,இது ரெண்ட மட்டு என்னைக்கு புறக்கணிக்காத என்றார்.

புறக்கணிக்கல பா,பசி வந்தா தான சாப்புட முடியு,தூக்கோ வந்தா தான தூங்க முடியு.
கத சொல்லுக கேட்டுட்டு போய் தூங்கிடுவ என்றேன்.

அவர் சிரித்தபடி நல்லா பேச கத்துகிட்ட என்று கூறிவிட்டு,
சரி வா நம்ப இன்னைக்கு நியூஸ் பாக்கலா,அப்ப அப்ப நியூஸ் லா பார்த்தாத நாட்ல என்ன நடக்குதுனு தெரியு என்றார்.

விருப்பமே இன்றி அவருடன் உட்கார்ந்து செய்திகள் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அப்போது " ragen "என்ற நான்கு வயது சிறுமியை பற்றி கூறிக்கொண்டிருந்தனர்.
ragen அவளுடைய பெற்றோர்களிடம் அவளுக்கு அவளுடைய முன் ஜென்மம் நினைவிருக்கிறது என்றும்,முன் ஜென்மத்தில் தான் ஓர் ஆண் என்றும்,அவளுடைய முன் ஜென்ம பெயர் வில்லியம்ஸ் என்றும்,தனக்கு 16 வயது இருக்கும் போது அவளுடைய பெற்றோர்கள் விபத்தில் இறந்து விட்டதாகவும்,அதன் பிறகு அவர் கட்டுமான தொழில் செய்து கொண்டிருந்ததாகவும்,பின்பு angel என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் அவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்ததாகவும்,அதில் இரண்டாவது மகனான bliss க்கு 10 வயது இருக்கும் போது யாரோ கடத்தி கொன்று விட்டதாகவும்,மூத்த மகனான ஜானுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை பிறந்ததாகவும் அவள் பெயர் riya என்றும்,சில ஆண்டுகளுக்கு பிறகு தான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகவும் கூறினால்.
ragen அவளுடைய முன் ஜென்ம பேதியான ria வை பார்க்க வேண்டும் என்று கூறி அழுததாகவும்,
முன் ஜென்மத்தில் அவள் muker என்ற கிராமத்தில் வாழ்ந்ததாக கூற பட்ட இடத்திற்கு சென்று விசாரித்த போது வில்லியம்ஸ் யின் பேதியான 65 வயதான ria வின் மூலமாக ragen கூறியது அனைத்தும் உண்மை என்று நிருபிக்கப்பட்டது என்றும் கூறினர்.

இதை போன்றெல்லாம் நடக்குமா என்று அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்தேன்.

பின்பு என் தந்தையை பார்த்து எ பா இதெல்லா உண்மையா !!! என்று கேட்டேன்?

அவர் டிவி யை நிறுத்திவிட்டு,உன்மன்றதாலதா டிவி ல காட்றாங்க என்றார்.

அப்ப போன ஜென்மம்,அடுத்த ஜென்மம் னு சொல்ராங்களே அதெல்ல நிஜமா?இறந்தவங்க திரும்ப பிறப்பாங்களா?என்று கேட்டேன்.

நமக்கு தெரியாத,புரியாத,விளக்க முடியாத நிறைய விஷயங்கள் இந்த உலகத்துல இருக்கு மா,மனுஷங்க இறந்த பிறகு அவங்களுடைய ஆன்மா என்ன ஆகுதுன்னு யாராலையு உறுதியா சொல்ல முடியறதில்ல,சில பேர் அவங்களுடைய பாவ புண்ணிய படி சொர்கத்துக்கோ இல்ல நரகத்துக்கோ போறதா சொல்ராங்க,சிலர் கடவுளாகவோ இல்ல பேயாவோ மாறிட்டதா சொல்ராங்க,சிலர் திரும்பவு பிறந்து வர்றதா சொல்ராங்க.
இதெல்லா உண்மையின்றத்துக்கான ஆதாரங்களு புராண காலத்துல இருந்ததா சொல்லப்படுது,உண்ம இல்லாத விஷயத்த யாரு கால காலமா நம்ப மாட்டாங்க.
அது மட்டு இல்ல நம்ப முன்னோர்கள் சொன்ன எல்லா விஷயங்களுக்கு பின்னாடி உண்மையு,அறிவியலு அடங்கி இருக்கு.
வெள்ள காரங்க 300 வருஷத்துக்கு முன்னதா சூரியனையு,அத சுத்தி இருக்க ஒன்பது கோள்களை பத்தியு கண்டு பிடுச்சு சொன்னாங்க,ஆனா நம்ப முன்னோர்கள் பல்லாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே சூரியனையும்,ஒன்பது கோள்களையும் நவகிரகங்களா கோவில்கள்ல வெச்சு வழிபட்டு இருக்காங்க..

அப்ப ஏ எனக்கு என்னோட போன ஜென்மோ நியாபகத்துக்கு வரல,என்று என் தந்தையிடம் கேட்டேன்.

எல்லாருக்கோ எல்லா நடக்காது மா,அந்த பாப்பாக்கு அவளுடைய போன ஜென்மோ நியாபகத்துக்கு வந்ததுக்கு எதாவது காரணம் இருக்கலா,அவளுடைய போன ஜென்மத்து பேத்தி மேல வெச்ச அதிக படியான அன்பு அதுக்கான காரணமா இருக்கலா.காரணமின்றி காரியமில்லை னு சொல்வாங்க,ஒரு விஷயோ நடக்குதுனா நிச்சயமா அதுக்கு ஒரு காரணம் இருக்கோ.
ஒரு வேல உனக்கு உன்னோட போன ஜென்மோ நியாபகத்துக்கு வந்தாலு,உன்னால போன ஜென்மத்து அடையாளத்தோட பழைய மாரி வாழ முடியாது,அதே மாரி பழைய ஜென்ம நினைவுகளோடு உன்னால இந்த ஜென்மத்துல நிம்மதியா வாழ முடியாது.இந்த ஜென்மத்துல நீ ரேணு வா தா வாழ்ந்தாகணு.என்று கூறினார்.

எ பா ஒரு வேல உங்களோட அடுத்த ஜென்மத்துல நா உங்க முன்னாடி வந்து நின்னா நாதா உங்க பொண்ணுன்னு உங்களுக்கு தெரியுமா என்று கேட்டேன்.

தெரியாது மா எப்படி தெரியு,எனா அடுத்த ஜென்மத்துல நா உன்னோட அப்பா கோபால இருக்க மாட்ட,வேற பேர்ல வேற ஒருத்தனா இருப்ப.
ஆனா உன்ன பாக்கும் போது ஏற்கனவே பார்த்தமாரி தோனலா.

நீ எப்பனா இந்த மாரி feel பண்ணி இருக்கியா?,அன்னைக்குதா ஒருத்தர முதல் முறையை பாத்து இருப்போ ஆனா அவங்கள ஏற்கனவே பார்த்த மாரி இருக்கோ,நல்லா தெரிஞ்சவங்க மாரி feel ஆகு.
சிலர காரணமே இல்லாம பார்த்தவுடனே பிடுச்சுடோ,அவங்க மேல ரொம்பவே ஆர்வம் காட்டுவோ,சிலர் நமக்கு எவ்வளவு நல்லது செஞ்சாலு அவங்கள நமக்கு பிடிக்காது,காரணம் கேட்டா தெரிலன்னு சொல்லுவாங்க.இது எல்லாத்துக்கோ காரணோ முன் ஜென்ம தொடர்புகள் தா.மனிதர்களால புரிஞ்சுக்க முடியாத,நம்மோட அறிவுக்கு அப்பாற் பட்ட நிறைய மர்மங்கள் இந்த உலகத்துல இருந்துட்டுதா இருக்கு.என்று கூறினார்.

என் தந்தையிடம் பேசிய பிறகு என் மனதில் இருந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்தது போல இருந்தது.மன சங்கடம் விலகியது.
என் தந்தையை கட்டி அனைத்து குட் நைட் பா என்று கூறினேன்.
குட் நைட் டா போய் தூங்கு என்று கூறி விட்டு அவரும் உறங்க சென்றார்.

தொடரும்....

எழுதியவர் : anuranjani (22-Feb-19, 6:45 pm)
சேர்த்தது : அனுரஞ்சனி மோகன்
பார்வை : 323

மேலே