உயிரே என் உயிரே
" பொண்ணா பொறந்தவ பெத்தவங்க ஒரு வார்த்தை சொன்னா ஏன் எதுக்குன்னு சிந்திக்கனும் இப்படி மதியாம அதையே மீண்டும் மீண்டும் செய்துகிட்டு இருக்கிறது இல்லை "" (அம்மாவுக்கு கொபம் உச்சத்தில் கொடிகட்டிப் பறந்தது )
(அம்மா திடீர் திடீரென பத்ரகாளி ஆகிவிடுகிறதே, ஏன்னு தெரியலையே மனதில் நினைத்துக் கொண்டு ஸ்வாதி அருகில் போய் ) " அம்மா இப்படி சுத்தி வளைச்சி மனசு புண்படும்படி யெல்லாம் பேசக்கூடாது என்ன கேக்கனுமோ அதை முகத்துக்கு நேராக கேட்டுவிடனும் அதுக்கு தான் கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், சந்தேகம் தீர விசாரிப்பதை மெய்ன்னு பழமொழியே இருக்கு "" (விளையாட்டாகவே சொன்னாள் ஸ்வாதி)
"" சரி நேரடியாகவே கேட்கிறேன் நீ வயசுக்கு வந்த பொண்ணு, அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா இல்லையா, ஊங்கூட படிக்கிற குறவன் பையனோட கொஞ்சம் விலகியிருக்க சொல்றேன் நான், நீ என்னடான்னா அவனுக்கு சாப்பாடு முதல் கொண்டு இங்கேயிருந்து கொண்டு போய் கொடுத்து விட்டு வருகிறீயே, அதுதான் ஏன்னு கேட்கிறேன் ""
"" ஏன்னா தர்மம் , தர்மம் தலை காக்குமுன்னு சொல்லுவாங்கல்ல, உங்களுக்கு தலப்பிள்ளையும் நான் தான் கடைகுட்டி பிள்ளையும் நான் தான் என்னை காக்குமேன்னுதான் பெத்தவங்க செய்யவேண்டியதை புள்ளைங்களே செஞ்சிக்கிட வேண்டிய நிலையில் காலம் ஓடிக்கொண்டிருக்கு அந்த அளவுக்கு காலம் மாறிப்போச்சி அம்மா … அவுங்க வீட்டில் வறுமை பட்டினி தாண்டவ மாடுதுன்னு தெரியவந்தது, சமைக்க ஒன்னுமே இல்லை நேத்தைக்கு மயக்கம் போட்டு விழுந்துட்டான் கேட்டா வீட்டில் ஒன்னும் இல்லை நான் ஒரு டம்ளர் பச்சத் தண்ணிய மொண்டு குடிச்சிட்டு புத்தக பையை எடுத்து மாட்டிக்கிட்டு வந்துட்டேன், பசி மயக்கம் போல இருக்கு அதான் என்னையறியா மலேயே விழுந்து விட்டு இருக்கேன்னான், அந்த இடத்தில் என்னை போட்டுப்பார்க்க படு பயங்கரமா இருந்தது பார்க்க பரிதாபமா இருந்தது, அப்பாவுக்கு வேற முகபரிட்ஷயமானவரின் மகன், மனசு உன்னால முடிஞ்சா அவனுக்கு ஏதாவது பண்ணேண்டி, மரக்கட்டை மாதிரி வேடிக்கை பார்த்துக்கிட்டு நிக்கிறே என்று நச்சரித்துக்கொண்டு இருந்தது அதனால் பணங்காசு எல்லாம் என்னால் கொடுத்து உதவ முடியாது அதான் சாப்பாடு கொண்டு போய் கொடுத்தேன் அதில் என்ன தப்பு அதுவும் உங்களுக்கு தெரிஞ்சி தானே எடுத்துக் கொண்டு போனேன் அப்படி என்னத்தை கண்டுபிடிச்சிட்டீங்க காலங்காத்தால இப்படி கொபப்படுறீங்க ரத்தக் கொதிப்பு வந்துவிடும்மா எனக்கு இல்ல உங்களுக்கு “”
(ஸ்வாதி சொன்னதைக்கேட்டு அம்மா சற்று அமைதியாகிவிட்டாள்) “” நான் சமைக்காம இருக்கிறேன் அப்போ என்னத்தை எப்படி கொண்டு போய் கொடுக்கிறேன்னு நானும் பார்க்கிறேன் “”
“” பிச்சை எடுத்தாவது கொண்டு போய் கொடுப்பேம்மா என் கண்ணு முன்னாடி இப்படி யாரையாவது பார்த்தால் ஏன்னு தெரியல கண்ணு என்னையறிமலேயே கலங்கிடுதும்மா “”
“”அந்த அளவுக்கு அவன் மேல உனக்கென்ன இவ்வளவு பெரிய கரிசனம் “”
“” கரிசனம் அவன் மேல இல்லையம்மா அவனது ஏழ்மையின் மேல, இல்லாமையின் மேல ஒரு ஜான் வயிற்றுக்கு ஒரு கவளம் சோற்றுக்கு பஞ்சமா என்று வந்த கரிசனம்மா “”
“” இல்லாதவங்களுக்கெல்லாம் வாரி வழங்க நீயும் நானும் உங்க அப்பாவும் பெரிய வறையறையின்றி வாரி வழங்கிய முதல் ஏழு வள்ளல்கள் பரம்பரையும் இல்லை, இரப்பவர்க்கெல்லாம் வாரி வழங்கிய இடை ஏழு வள்ளல்கள் பரம்பரையும் இல்லை, ஒருத்தரை ஒருத்தர் புகழுகிறவர்களுக்கு வாரி வழங்கும் கடையேழு வள்ளல்கள் பரம்பரையும் இல்லை நீயும் நடுத்தர குடும்ப பெண்தான் என்பதை மறந்து விடாதே இல்லை பெரிய கம்பத்து காரர்களும் இல்லை ஞாபகம் இருக்கட்டும் இதை இப்படியே விட்டா சரியில்லை, குடும்ப தலைவர் தலப்பா கழண்டுவிடும் போல தோனுது, குடும்ப தலைவர் வரட்டும் உன் ஞாயத்தை சொல்லி பார்ப்போம் “”
(கணவன் உள்ளே நுழைந்து ஆடைகளை களைந்த வாறு உள்ளே தாயிக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் முரண்பாடான வாக்குவாதங்களை உற்று கேட்டவாறு அமர்ந்து இருந்தார்
அவர்மீது பிரியமான வளர்ப்பு பூனை அவர் வந்து விட்டார் என்பதை காட்ட போய் தண்ணிய வெண்ணிய கொடுங்க என்பதை போல் சமயலரைக்குப் போய் குடும்ப தலைவியின் முன்னால் சத்தம் போட்டால் தெரிந்து கொள்வார்கள் வீட்டுக்கு தலைவர் வந்துவிட்டார் என்று ஓடிவந்து கவனிப்பது வழக்கம் செம்பு சொம்பில் குடிக்க தண்ணீரும் கூடவே தேனீரும் கொடுத்தாள் ஸ்வாதியின் அம்மா )
“” என்ன இன்னைக்கு செம்பு சொம்புல குடிக்க தண்ணீர் ஏது சொம்பு “” கேட்டார் கணவர்
“”ஒரு வாரப்பத்திரிகை படிச்சேன்””
“” ம்…படிச்சதுக்காக பரிசா கொடுத்தாங்களா இப்போவெல்லாம் படிக்கிறதுக்கெல்லாம் பரிசு தராங்களா பரவாயில்லையே பத்திரிக்கை உலகம் “”
“” என்னை முழுசா சொல்ல விடுவீங்களா அதில் போட்டு இருந்தது இதில் தண்ணி வச்சி குடிச்சா உடம்புக்கு நல்லதுன்னு எட்டு பத்து விதத்தில் நலம் பயக்குதாம் துளக்க பால்மாறிக்கிட்டு ஓரங்கட்டி வச்சிருந்த சொம்பு அதை எடுத்து துளக்கி வச்சேன் “”
“” ஒரு துணிக்கடை வாசலில் பொம்பளை பொம்மைக்கு அழகா பொடவைகட்டி நிற்கவைத்து இருந்ததாம் அதை உண்மையான பொம்பளை என்று நினைத்து ஜன நடமாட்டம் இல்லாத நேரமா பார்த்து மூன்று பேர் கோணிப்பையை போர்த்தி தூக்கிக்கொண்டு போய் ஆள் அரவமில்லாத இடத்தில் அவிழ்த்து வேட்டையாட பார்த்தார்களாம் அடடா இது பொம்மையா இதற்கா இவ்வளவு சிரமம் எடுத்து கொண்டோம் என்று வெட்கிப்போனார்களாம் அந்த மாதிரி ஆகிவிடக்கூடாது எதையும் நல்லா புரிஞ்சி செயல் படு உன் சொம்புக்கதையை விடு அதுசரி
என்ன உள்ளே பிள்ளையை திட்டிக்கிட்டு இருந்தே என்ன பண்ணிணா ஏன் அவளை கோபப்பட்டுக்கிறே அவள் விவரம் தெரியாதவள் ஒன்னும் இல்லை “”
“”இவளோட கூட படிக்கிற குறவன் மகன்கிட்ட ஒரு வயசுக்கு வந்த பொண்ணுக்கு என்ன பழக்கம்ன்னு கேட்டேன் அதோடு இல்ல சாப்பாடு வேற கொண்டுபோய் கொடுத்து விட்டு வறா இது எல்லாம் சரியில்லைன்னு கடிந்து கொண்டேன் “”
“” அது சரி குறவன்னு இன்னொரு தடவை சொல்லாதே அவன் பெயர் காத்தவ ராயன் என் பாலிய பிராயத்திலே அந்த பையனோட அப்பா தான் என் உயிரை காப்பாத்தினவர், நான் சிறுவனா இருந்த போது விரியன் பாம்பு கடிச்சிடுச்சி, விதி முடிஞ்ச வங்களத்தான் விரியன் பாம்பு கடிக்கும் என்பாங்க இப்போது குறவன் என்றாயே அவன் எனக்காக சீத்து பூத்துன்னு மூச்சிறைக்க ஓட்டமா ஓடி அவுங்க அப்பாகிட்ட சொல்லி அழைச்சிக்கிட்டு வந்து விஷமுறிவு மருந்து கொடுக்கவச்சி காப்பாத்தினான் அன்னையில் இருந்து இரண்டுபேரும் நெருக்கமான பரிட்ஷயம் ஆயிட்டோம் அவன் பிள்ளைக்கு சாப்பாடு கொடுத்தது தப்பு இல்லை இங்கே சம்பள வேலை செய்கிறவனே ஒருவேலை சாப்பிட்டுவிட்டு ஒருவேளை பட்டினியால் வாடுகிறான் ஊசிமணி, காசிமணி, பாசிமணி விற்று அவன் பிள்ளையை படிக்க வைக்கிறான்னா பாராட்டக்கூடிய விஷயம் அவன் இல்லாதப்பட்டவன் ஒருநேரம் சாப்பாடு கொடுத்தால் நாம போண்டியாகிவிடப் போறதில்லை போய் வேலையப்பாரு நம்ம திருமணத்தின்போது நம்ம இருவரையும் அக்னி குண்டத்தை ஏழு அடி போட்டு சுற்றிவர சொன்னாங்களே அதுக்கு அர்த்தம் என்ன சொல்லும் “
“”அது புரோகிதர்கள் விஷயம் அதை ஏன் இப்போ இங்கே இழுக்கிறீங்க “”
“” அது புரோகிதர் விடயம் என்றால் அதை அவன் வீட்டில் உக்காந்து சொல்லிக்க வேண்டியது தானே ஏன் நம்ம கல்யாணத்தில வந்து சொல்லோனும் ஏன்னா நமக்கு இதெல்லாம் நடக்கனும் அதுக்காகத்தான் சொல்றான் நாம பஞ்சம் எந்த பஞ்சாயத்துக்கும் உடன்பாடு இல்லாமல் பஞ்சாப்பறக்கனும், நமக்குள் எந்த வைராக்கியமும் இல்லாமல் ஆரோக்கியமா இருக்கனும், எந்த காரியம் நடந்தாலும் அது நல்லதாக நடக்கனும், செல்வத்தையும் அதனால் சோகத்தை கொடுக்காமல் சுகத்தையே கொடுக்க, லஷ்மி கடாச்சத்தை பெறவே, முப்போகமும் தங்குதடையில்லாது மும்மாரி பொழிந்திட முப்போகமும் விளைந்திட அதனால் நாம் நிம்மதி மூச்சு விட , இது ரொம்ப ரொம்ப முக்கியம் தர்மங்கள் நிலைக்கனும் நீதி நிலைக்கனும் அதனால நாமும் தர்மமா நடந்துக்க வேணும் , பதுக்கிவச்சிக்கிட்டு கேழ்கிறவங்களுக்கு கொடுக்க ஒன்னும் இல்லையின்னு சொன்னா அது இல்லாமல் போயிடும் வேற எந்த வழியிலாவது, அப்போ போச்சு போச்சின்னு அடிச்சிக்கிட்டு அழுவக்கூடாது அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாதுன்னு உன் மகள் தர்மம் பண்ணியிருக்கிறா அதை போய் “”
“”அப்போ நான் உங்கமகள் இல்லை யாப்பா “” மகள் கேட்டாள்
“” சரி என் மகள்””
அவன் மட்டும் என்னை காப்பாற்றாமல் இருந்திருந்தால் உன் அம்மாவுக்கு புருஷனாகவும் உனக்கு அப்பாவகவும் நானாக இருந்திருக்க மாட்டேன் )
“” நீங்க என்னை கல்யாணமே கட்டிக்கிட்டு இருந்து இருக்கக்கூடாது பேசாம இமயமலைக்கு போயி இருக்கனும் “”
“” அது இருக்கட்டும் இப்போது சொல்லிக்கிட்டு வந்ததிலே எதையாவது ஒன்றையாவது நாம கடைபிடிக்க வேணாமா “”
“” நீங்க ஒன்னு பார்க்கிறவங்க தப்பா பேச மாட்டாங்களா அதுக்காக நம்ம புள்ளையத்தான் நான் கண்டிச்சேன் ஊரான் வீட்டு புள்ளையையா கண்டிச்சேன் “”
உனக்கு ஒன்னு தெரியுமா இப்போது குறவன்னு சொன்னாயே அவன் காடு மேடுன்னு நாலு இடம் சுத்தரவன் அப்படி சுத்தும் போது ஒரு ஜோடி ஒரு ஓடையில் மறைந்து பேசிக்கிட்டு இருந்ததை பார்த்து விட்டு அவர்கள் இன்னாரின்னார் பிள்ளைகள் என்று தெரிந்து இதெல்லாம் நல்லது இல்லை என்று சொல்லிவிட்டு அவன் வேலையை பார்த்துக்கொண்டு இடத்தை விட்டு நகர்ந்து விட்டான் ஆடு மேய்த்து கொண்டிருந்த ஊமையன் குறவன் ஓடையில யார்கூடவோ பேசினானே அது யாராக இருக்கும் நம்ம கூட ஆடுமேய்ப்பவன் ஊமையா என்னோட அட்டையும் பாத்துக்கோ நான் போய் திங்க ஏதாவது கொண்டுவாரேன் என்று சொல்லிவிட்டு போனவன் ஓடையில் என்ன பண்றான் என்று சத்தம் போடாமல் மறைந்து பார்க்க அங்கே அவன் இல்லை பண்ணையார் மகளும் வேறு ஒருவனும் அலங்கோலமாக இருந்ததை கண்டுவிட்டு ஓட்டமாக ஓடி பண்ணையாரிம் சைகையால் சொல்லிவிட்டான் பண்ணையார் கையும் களவுமாக பிடிக்க நேராக போலிசில் பிராது கொடுத்தான் நீங்க சொல்றதுக்கு சாட்சி இருக்கா என்று கேட்க பெண்ணை பெத்தவங்களே சொன்னா அதை உண்மை என்று நம்பும் படி இல்லை வேணுமுன்னா நீங்க கோர்ட்டுக்கு போங்க என்று அனுப்பி விட்டார்கள்
ஊமையனால் சாட்சி சொல்ல முடியாது பண்ணையார் ஊமையனிடம் கேட்கிறார் உன்னை தவிர இவர்களை வேறு யாரேனும் பார்த்தார்களா என்று
ஊமையன் குறவனை சொன்னான் பண்ணையார் குறவன் வீடு தேடி போனான் அவனிடம் பேசி பணியவைத்தான் பண்ணை
பண்ணையார் போனதும் பண்ணையார் மகளும் கூட இருந்த பையனும் குறவன் வீட்டுக்குள் நுழைந்து நீங்க மட்டும் உண்மையை சொன்னால் இதோ பாருங்க விஷம் இரண்டு பேரும் குடித்துவிட்டு உயிரை விட்டுக்குவோம் நாங்க சாவரது உங்களுக்கு சம்மதமுன்னா பண்ணையார் சொன்னபடியே சாட்சி சொல்லுங்க என்று கூறி புறப்பட்டார்கள்
நில்லுங்க உங்க உயிருக்கு இழக்கு வர நான் விட்டுவிட மாட்டேன் என் மேல் நம்பிக்கை இருந்தால் அந்த விஷத்தை இங்கே வையுங்கள் நம்பிக்கை இல்லையின்னா உங்க இஷ்டப்படி பண்ணுங்கோ என்றான் குறவன்
விஷமருந்தை வைத்துவிட்டு சென்றார்கள்
கோர்ட்டில் காத்தவராயன் ராயன்..காத்தவராயன் ராயன்.. காத்தவராயன் என்று அழைக்கப்பட்டார்
தங்கமணி என்கிற பெண்ணும் மாணிக்கம் என்கிற பையனும் ஓடையில் மறைந்து இருந்ததை நீங்கள் பார்த்தீர்களா
ஐயா உண்மையை சொல்லவா இல்லை பொய்யை சொல்லவா
பொய்சாட்சி சொல்ல சம்பளம் வாங்கியிருந்தால் பொய்யைச்சொல்லு வரும்படி வாங்கவில்லை என்றால் உண்ணையைச்சொல்லும்
ஐயா சம்பளம் வாங்கி
இருந்தாலும் கிம்பளம் வாங்கி
இருந்தாலும் சொல்லப்போவது என் உயிரே போனாலும் கவலை இல்லை பொய்யல்ல உண்மை
சொல்லும்
கவனமாக கேளுங்கள் ஒன்றின் காதில் ஒன்று மாறி மாறி கிசுகிசுத்துக் கொண்டதை என் இரண்டு காதுகளாலும் சத்தியமாக கேட்டேன்......!
கசமுசான்னு இரண்டும் நடந்து கிட்டதையும் என் இரண்டு கண்களாலேயும் சத்தியமாக பார்த்தேன்........!
கண்களால் பார்த்ததையும் காதுகளால் கேட்டதையும் இந்த கச்சேரியில் சொல்லிவிட்டேன்
நீங்கள் இப்போது சொன்ன கிசுகிசையும் கசமுசாவையும்
செஞ்சது யார் யார்ன்னு பெயரைச் சொல்லு
"" அந்த ஆண்கிளி, பெண்கிளி இரண்டும் தான் அதைத்தவிர நான் வேறு யாரையும் பார்க்க தென்படலங்க அந்த பச்சைக் கிளிகள் இரண்டையும் தவிற என்றான் குறவன்
நீங்கள் போகலாம்
பெண்ணையும் பையனையும் விசாரித்தார்கள் பெண் அவரை உயிருக்கு உயிரா விரும்புகிறேன் ஐயா என்றாள் பையனும் அதேபோல் சொன்னான் அவமட்டும் எனக்கு இல்லேன்னா நான் என் உயிரையே விட்டுக்க தயாராக இருக்கிறேன் ஐயா
இது ஒரு வழக்கு வக்காலத்து வாங்க இதற்கொரு வழக்கறிஞர் இதற்கு ஒரு சாட்சி இதற்கு ஒரு நீதிபதி. இதற்கு ஒரு தீர்ப்பு இதற்கு ஒரு கச்சேரி வழக்கை தொடுத்த இவனும் ஒரு சம்சாரி இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டா பிறகு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தானே
""வழக்கு நிராகரிப்பு """
பொண்ணு க்கும் பையனுக்கும் கோர்ட்டால் கல்யாணம் நடத்திவைக்ப்பட்டது
பையனும் பொண்ணும் முதலில் அவுங்கவுங்க அப்பா அம்மா காலில் விழுந்து ஆசீர் பெறவில்லை குறவன் காத்தவராயன் காலில் விழுந்து ஆசீர் பெற்றார்கள்
இப்படிப்பட்டவனுக்கு பொறந்தவன் அவன் மகன் “” எது தப்பு எது சரியின்னு அவளுக்கும் தெரியும் பையனுக்கும் தெரியும் அவங்க ஒன்னும் விவரம் தெரியாதவங்க இல்லை பன்னிரண்டாவது படிக்கிறவங்க வீணா நீ இல்லாததையும் பொல்லாததையும் பேச வேண்டாம் போய் வேலையை பாரு ஆமாம் காலையில் வாசலில் தினம் கோலம் போடுவது யார் நீயா உன் மகளா
உங்க மகள்தான் வாரத்தில் இரண்டு கிலோ பச்சரிசி அறைச்சிக்கிட்டு வந்து அதுலதான் கோலம் போடுறா நாங்க எல்லாம் வெள்ளை கல்லை கொண்டுவந்து இடிச்சி வச்சி கோலம் போடுவோம்
நீ வெள்ளை கல்லை அறைச்சி வாசலை அழகு படுத்துறே அவ அரிசியை அறைச்சி வாசலையும் அழகு படுத்துறா அதேசமயத்தில் எறும்புகளுக்கும் கண்ணுக்கு தெரியாத பூச்சிகளுக்கும் தினம் ஆகாரம் கொடுக்கிறா அதுகளோட வாழ்த்துக்களை பெறுகிறாள் இதில் இருந்து தெரியவில்லையா உனக்கு
“” செல்லம் கொடுக்வேண்டியதுதான் இது அளவுக்கு மீறிய செல்லமா இருக்கு, இவ்வளவு கொடுக் கக்கூடாது, நம்ம பேச்சை யார் கேழ்கிறாங்க, எப்படியாவது பொவட்டும் எனக்கென்ன
தனிமையில் புலம்பினார்”” ஸ்வாதினின் அம்மா
“” ஸ்வாதி இந்த ஐநூறு ரூபாயை பையனோட அப்பாகிட்ட கொடுத்து சாப்பாட்டுக்கு அரிசி பருப்பு வாங்கிக்க சொல்லி கொடு”” என்றார் ஸ்வாதியின் அப்பா.
“” சரிப்பா””
“” உண்மை குத்துயிரும் கொலை உயிருமாக கிடக்கிறது, அதை காப்பாற்ற நாதியற்று கிடக்கிறது
ஒரு நாள் இல்லை ஒருநாள் எழுந்து வராமலா போய்விடும் வகையாக குறவர் கூட்டத்தில் தள்ளிவிட்டு விட்டு என்னை பெத்தவங்க அவுங்க ஒழிந்து போனது சள்ளை என்று நிம்மதியாக இருக்கிறார்கள் இந்த பாட்டை யார் படுவது “”
“”ஸ்வாதி அம்மாவை கூப்பிடு..... (அம்மா வந்ததும்) ஸ்வாதி நீ போய் உன் வேலை என்னவோ அதை பாரு””
“”சரிப்பா…””
“” இங்கே பார் இப்படி உட்காரு உன் ஆதங்கம் சரிதான், அது எனக்கும் தெரிகிறது, ஆனாலும் பிள்ளைங்களை திட்டிகொட்டி திருத்த முடியாது, இரட்டிப்பாக வளர்ந்து விடும், தட்டிக்கொடுத்து சொல்லிப்பாரு யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள் அது ஏன் உமக்கு புரியமாட்டேங்குது, நம்ம புள்ள இப்படி இருக்கனும் அப்படி இருக்கனும் என்று உனக்குள் ஆயிரம் எதிர்பார்ப்புகள் இருக்கலாம், இருக்ககூடாது என்று சொல்ல வரல, நான் என்ன சொல்லவரேன்னா நெருப்பின் அணல் மட்டும் படட்டும் இது சுடக்கூடியது என்று அவர்களாகவே உணர்ந்து கொள்வார்கள் நீ நெனைக்கிற இடத்தை அவர்கள் நொறுங்கிக் மாட்டார்கள் அதுக்காக நெருப்பையே அள்ளி அவர்கள் மேல் கொட்டினால் என்னாகும் சாம்பலாகும் சாம்பலாக்கி பார்க்கவா நாம் புள்ளைங்களை பெத்துக்கிறோம் “”
“” மன்னித்து விடுங்கள் இனி நான் நிச்சயமாக எதையும் கண்டிக்கவும் மாட்டேன் கண்டுக்கவும் மாட்டேன்””
மகளுக்கு அரையாண்டு பரிட்சை முடிந்து பத்து நாள் பள்ளிக்கூடம் விடுமுறை விட்டு உள்ளதால் மறுநாள் தாயும் மகளும் பக்கத்து ஊர் சந்தைக்கு போனார்கள்
கூட படிக்கிற சில பிள்ளைகள் அவரவர் பெற்றோர்களோடு சந்தைக்கு வந்துள்ளனர் அதில் ஒருத்தி அமிர்தா
“” ஸ்வாதி...ஸ்வாதி...”” என்று அழைத்தவாறு அமிர்தா அவளின் பெற்றோர்களை விட்டு ஓடினாள் ஸ்வாதியின் அருகில் சென்று இருவரும் கலந்து பேசிக்கொண்டு இருக்கும் போது அமிர்தா வின் தாய் வந்து "" குறவர்கள் கூட சவகாசம் வைப்பவர்கள் இடம் உனக்கென்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது, மொளைச்சி மூனு இலை விடல அதுக்குள்ள ஆம்படியான் கேட்குது அவளுக்கு அப்படி பட்ட அவகிட்ட பேச்சு வச்சிக்கிட்டா நானே அடிச்சி சாவடிச்சிடுவேன் நடடி”” என்று அமிர்தாவை இழுத்து க்கொண்டு போவதைப் பார்த்த ஸ்வாதியின் அம்மாவுக்கு அங்கேயே உயிரை விட்டுக்கொள்ள வேண்டும் போல் தோன்றியதால் சந்தையில் ஏதும் வாங்காமல் மகளை அழைத்து க்கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள்
ஸ்வாதிக்கும் அவமானமாகி விட்டது அமிர்தா வின் தாய் அநாகரீகமாக நடந்து கொண்டதை எண்ணி கண் கலங்கிவிட்டாள் துக்கம் தொண்டையை அடைக்க
“” இப்படி யெல்லாம் நடந்து விடகூடாது என்பதற்காக தான் நான் உன்னை ஜாக்கிறதையாக இருக்கச்சொன்னேன் அப்போது என்மீது கோபப்பட்டாயே நான் சந்தேகப்பட்டது இப்போது சரியாக ஆகிவிட்டதே இப்போது கவலைப்பட்டு என்ன பிரயோசனம் அவள் தெரிஞ்சி பேசினாளோ தெரியாமல் பேசினாளோ முன்ன பின்ன யோசிக்காமல் மனித தன்மை கொஞ்சம் கூட இல்லாமல் பேசிவிட்டாள் அவளுக்கும் ஒரு பொண்ணு இருக்கிறதை மறந்து பேசுகிறாள் அவள் வாய்ப்பாவம் அவளுக்கு பதில் சொல்லும் நீ போய் வீட்டில் இரு நான் சக்கரை வாங்கிக் கொண்டு வரேன்”” என்று கடைக்கு போனாள் ஸ்வாதியின் அம்மா
அமிர்தாவும் சும்மா இல்லை “” சினேகிதியை அசிங்கம் படுத்தி விட்டாங்களே அம்மா”” என்று அவளோட அம்மா விடம் ஸ்வாதி க்காக சண்டையிட்டு கொண்டு “” இனி அவ முகத்தில் நான் எப்படி விழிப்பேன் நீயும் ஒரு அம்மாவா இல்லை அம்மா என்கிற பெயரால் உருவான ராட்சசியா நாலு எழுத்து படிச்சி இருந்தா தானே யாருகிட்ட எப்படி பேசனும் யாருகிட்ட பேசக்கூடாது என்ற வெவஸ்தை தெரிஞ்சிருக்கும் போயும் போயும் இப்படிபட்ட வங்க வயித்துல ஏன்தான் என்னை பொறக்கவச்சி என் மானத்தை வாங்குறானோ அந்த கடவுள் இனி நான் பள்ளிக்கே போகமாட்டேன் உன்னால் என் படிப்பு பாழாப்போச்சி என் பாவம் உன்னை சும்மா விடாது “” என்று தாய் என்று கூட பாராமல் மான நஷ்டமாக பேசி விட்டாள் அமிர்தா
“” எப்படியோ செஞ்சி தொலை இல்லை செத்து தொலை”” என்று வெடுப்பாக கூறி தண்ணி எடுக்க குடத்துடன் குளத்துக்கு சென்றுவிட்டாள் அமிர்தா வின் தாய்
அமிர்தா உள்ளே போனாள் கயிறை எடுத்தாள் தூக்கில் தொங்கிவிட்டாள்
அமிர்தாவின் அம்மா சொன்னது ஸ்வாதியின் நெஞ்சை பிளந்து விட்டது போல் வேதனை என்றால் என்னவென்று தற்போது தெரிந்து கொண்டாள் அவளால் ஜீரணிக்க முடியவில்லை இனி இந்த ஜென்மத்துக்கு உயிரோடு இருக்க எண்ணமில்லை போனாள் தூக்கில் தொங்கிவிட்டாள் இரண்டு வீடும் இழவு வீடாக ஆகிவிட்டது
டாக்டரை வரவழைத்து பார்த்தார்கள் டாக்டர் அடங்கி ஆறு மணி நேரமாயிக்கிறது என்று கையைவிரித்துவிட்டார்
ஸ்வாதி திக்கு இரங்கல் அனுசரிக்க ஊர் ஜனம் மாலையும் கையுமாக வந்தவண்ணம் இருந்தார்கள் வாசலில் பாடை தயார் நிலையில் இருந்தது கடைசியில் பிணத்தை குளிப்பாட்டி பாடைக்கு கொண்டுபோக தண்ணீர் குடங்கள் நிறப்பப்பட்டு பிணத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கும் வேளையில்
குறவன் மகனுக்கு ஸ்வாதியின் மரண செய்தி அறிந்து ஓவென கதறியழுத வாறு மூச்சு வாங்க ஓடிவந்தான் ஸ்வாதியின் வீடுநோக்கி
“” ஸ்வாதி...ஸ்வாதி..ஸ்வாதி..எழுந்திரு பள்ளிக்கூடம் போக வேண்டாமா நேரமாச்சி தூங்கினது போதும் சீக்கிரம் எழுதிரு, எனக்கு உயிர் கஞ்சி கொடுத்தவள் உயிரை பறித்துக்கொண்டானே அந்த கடவுள் அவன் நல்லா இருப்பானா எழுந்திரு...எழுந்திரு...(என..கதறினான்) பசிக்கிறது எழுந்து எனக்கு சாப்பாடு கொடுக்க மாட்டாயா நீ எனக்காக சாப்பாடு கொண்டு வருவாய் என்று பட்டினியால் வாடினேன் சாப்பாடு வரவில்லை மாறாக உன் மரண சேதிதான் வந்தது ஓடோடி வந்தேன் எழுந்திரு பசிக்கிறது எழுந்திரு சாப்பாடு கொடு என்றவாறு மயங்கி அவள் காலடியில் வீழ்ந்து விட்டான்”” குறவன் மகன்
ஸ்வாதி சட்டென எழுந்து விட்டாள் உயிர் பெற்று விட்டாள் போன உயிர் வந்து விட்டது எழுந்து மக்களை பார்த்து “” என்ன இங்கே இவ்வளவு கூட்டம் என்னாச்சி ஏன் இவங்க எல்லாம் அழறாங்க”” என்று கேட்ட வாறு வீட்டுக்கு உள்ளே ஓடி ஒரு தட்டை எடுத்து சோற்றை போட்டு நாலு வாய் உருட்டி தனக்கு வயிற்றுக்கு போட்டுக்கொண்டு வேறு கிண்ணத்தில் சோற்றை போட்டு எடுத்துக் கொண்டு வெளியில் வந்து “” அம்மா அம்மா நம்ம தெருவில் யார் செத்துட்டாங்க வெளியில் பாடை கட்டிக்கிட்டு இருக்காங்களே சரி நேரமாவது நான் குறவன் மகனுக்கு சோறு கொடுத்துவிட்டு வந்துடுறேம்மா அப்பா கொடுக்கச்சொன்ன காசும் இன்னும் கொடுக்கலம்மா மறந்துட்டேன் அதையும் கொடுத்துவிட்டு வந்துடுறேம்மா”” என்றதும்
“” நீ எங்கே அங்கே போற அவன் இங்கே இருக்கிறாம்மா “”
“” இவன் இங்கே எப்படி நேரமாயிடுச்சின்னு அவனால் பசி தாள முடியாமல் அவனே என்னைத் தேடி வந்துட்டான் போல இருக்கு நீங்களும் ஏங்கிட்ட சொல்லவே இல்லை
அதை சொல்ற நெலமையில் நீ இருந்திருந்தா சொல்லாமலா விட்டிருப்போம்
என்ன ஆச்சி எனக்கு என்ன ஆச்சி நான் நல்லாதானே இருக்கேன் டேய் எழுந்திருடா சாப்பிட்டுவிட்டு அப்புறம் தூங்குவே எழுந்திருடா என்று கீச்சு கீச்சு என கத்தினாள் வாயில் இருந்து சப்தம் ஏதும் வரவில்லை தொண்டை வீங்கி இருந்ததால் அங்கே கூடி கண்ணீர் சிந்தியவர்கள் ஓவென வாய்விட்டு அழுதுவிட்டார்கள் மிகுந்து ஆச்சரியமாக குறவன் மகனை கட்டிப்பிடித்துக் கொண்டார்கள் அவன் முகத்தில் தண்ணீர் தெளித்து நினைவுக்கு கொண்டுவந்தார்கள்
நினைவு வந்ததும் ஸ்வாதியை கட்டித்தழுவி கலங்கிவிட்டான் என்னால் தானே உனக்கு இந்த நிலமை சாக வேண்டியது நீ இல்லை தெய்வமே நான் தான் நீ என் மீது இரக்கப்பட்டதால் தானே உனக்கு இந்த வீண்பழிபாவங்கள் என்று கதறினான் குறவன் மகன்
எப்பா சாமி உங்க அப்பன் நான் சாவ பொழைக்க கிடந்த போது எனக்கு உயிர் கொடுத்தான் அவன் மகன் நீ என் மகளுக்கும் உயிர் கொடுத்தாய் நீ சாதாரன மனிதப்பிறவி இல்லையப்பா தெய்வப்பிறவி என்று ஸ்வாதியின் தந்தை அவனை கட்டி அழுதார் ஸ்வாதியின் அம்மா இங்கே வா இப்போது சொல்லு அவனை குறவன் மகன் என்று மூச்சு க்குமூச்சு உன் வாயில் அதானே வரும் அதை இப்போது சொல்லேன்
ஸ்வாதியின் தாய் அவன் அருகில் சென்று தொப்பென்று சிறுவன் காலில் விழுந்து கதறினாள
அம்மா..அம்மா..நீங்க போய் என் காலில் விழுவதா தொப்பென்று அம்மாவின் காலில் விழுந்து அம்மா எந்தன் சிநேகிதி என்னால் உயிர் பெறவில்லையம்மா அவள் என் மேல் இரக்கப்பட்டதாலும் நான் அவள் மேல் உயிருக்கும் மேலாக அன்பு வைத்து இருந்ததுமே அவளை உயிர்ப்பிக்க வைத்தது அத்தோடு ஆண்டவன் எங்கள் இருவரின் நற்பழக்கமதை ஏற்று ஆசீர்வதித்ததாலுமே என்று அழுதான்
எப்பா நீ குறவன் மகன் இல்லையப்பா மனித பிறவியும் இல்லை தெய்வப்பிறவி உன் காலில் விழுவது தப்பு இல்லையப்பா
ஆமாம் நான் தூக்கு மாட்டிக் கொண்டேன் இல்ல செத்துபோயா கிடந்தேன் அப்படின்னா நான் எப்படி பொழைச்சேன் அப்படின்னா என் கடமை தீரலன்னு தானே அர்த்தம் உன் கடமையை முடிச்சிட்டு வா என்று பொழைக்க வைத்தார் போலும் அந்த கடவுள் நான் என் கடமையைத்தான் செய்தேன் ஆனால் ஊரார் என்னை தப்பா பேசினார்கள் காதலுக்கும் கருணைக்கும் வித்தியாசம் தெரியாத மடையர்கள் இருக்கும் வரை இப்படி தான் உயிர் ஊசல் ஆடிக்கொண்டு இருக்கும்
உன்னை முகமுகமாய் யார் தப்பாக பேசினார்களோ அவர்கள் மகள் உன் சினேகிதியும் உன்னை இழிவுபடுத்தி பேசியதை தாங்க முடியாமல் உன் முகத்தில் எப்படி முழிப்பேன் என்று தூக்கில் தொங்கிவிட்டாள் அடக்கமும் செய்யப்பட்டுவிட்டாளம்மா
உடனே ஸ்வாதி எழுந்து எங்கள் இருவர் சிநேகிதத்தை தவறாக மனதிலே எண்ணியவங்களுக்கும் முகத்துக்கு நேராக பேசியவர்களுக்கும் அடைமொழியால் பேசியவர்களுக்கு ஒரு வேண்டுகோள் எங்களால் எதுவரை படிக்க முடியுமோ அதுவரை சேர்ந்தே படித்துவிட்டு என் உயிர் பிச்சைக்கு காரணமானவன் குறவன் மகனோடு தான் வாழ்வேன்
இதுவரைக்கும் எனக்கு காதல் கீதல் கத்திரிக்காய் பொடளங்காய் ஒன்னும் தெரியாது இப்போ எனக்கு தெரிந்து விட்டது எனக்கு காதல் வந்துவிட்டது நான் குறவன் மகனை காதலிக்கிறேன் அவன்தான் என் உயிரே என் உயிரே
கைப்பிடி போட்டாத்தான் அது அகப்பை அது போடலன்னா அது வெறும் கொட்டாங்கச்சி இப்போது கொட்டாங்கச்சியா நீங்க நெனைக்கிற குறவன் மகன் கூடிய சீக்கிறத்தில் அகப்பையாக ஆயிடுவான் ஆக்கப்போறேன் அந்த கைப்பிடி நானாகத்தான் இருப்பேன்
உங்களால் முடிந்தால் எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வையுங்கள் உங்களால் முடியவில்லை என்றால் போய் பதுங்கிக் கொள்ளுங்கள் எந்த சமுகம் வந்து அதை தடுக்க முடியாது, எந்த ஒரு சக்தியாலும் எங்களை பிரிக்க முடியாது என்று கீச்சு குரலில் எச்சரிக்கை விடுத்தாள்
“”சரியான முடிவு “” ( உணர்ந்து கொண்டோர் உள்ளத்தில் உலவியது)
ஊர் எங்கிலும் குறவன் மகனைப்பற்றியே பேச்சு ஸ்வாதியின் சாவுக்கு வராமல் இருந்தோர்கள் சொந்தம் பந்தம் தெரிந்தவர் தெரியாதவர் இந்த அதிசய சம்பவத்தை கேள்வி பட்டவர்கள் எல்லாம் இந்த அதிசயத்தை காண வண்டிக்கட்டிக் கொண்டு ஸ்வாதியின் வீடுநோக்கி வரலானார்கள் வழியில் கேட்போர்க்கெல்லாம் செத்தவங்க மறுபடியும் உயிராயிட்டாங்களாம் அந்த அதிசயத்தை கண்ணால் ஒரு தடவை பார்த்து விடனும் போல தோனுது அதனால் போகிறோம் என்று சொல்லிக்கொண்டே வந்தார்கள், கட்சிக்காரர்கள் கூட்டம் போல் தென்பட்டது அதைவிட அதிகமாகக் கூட்டம் காணப்பட்டது காசு கொடுத்து கூட்டாத கூட்டமாக காட்சியளித்தது
அங்கே அமிர்தாவின் தாயின் வாய் ஜாலம் பெற்ற மகளை பலிகொடுத்தாள் உடலை தகனம் செய்துவிட்டு வீடு வந்ததும் அமிர்தாவின் தந்தைக்கு சந்தையில் நடந்த விஷயம் தெரியவர மகளின் இழப்பை எண்ணி அவளின் அம்மா அப்பா வுக்கு இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு
விவகாரம் விஸ்வரூபம் எடுத்து விவாகரத்தில் முடிவுற்றது
அமிர்தாவின் தாய் ஸ்வாதியின் இடத்தில் வந்து என்னை மன்னிச்சிடும்மா எனது உயர் சாதி என்ற மமதையில் பேசியதால் பத்து மாதம் சுமந்து பெற்ற மகளை இழந்தேன் அதனால் இப்போது என் வாழ்கையையே இழந்து வாழா வெட்டி என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டு வெளியில் தலைகாட்ட முடியாது தவிக்கிறேன் அம்மா உன் காலில் வேணுமென்றாலும் விழுகிறேன் மன்னித்து விட்டேன் என்று ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் போதும் தொலைத்த மகளை எண்ணி வாழ்க்கை கிடைக்காமல் போனாலும் இருக்கப்போகும் காலம்வரை குற்ற உணர்வு இல்லாமல் கழிக்கவாவது மன்னித்து விட்டேன் என்று சொல்லம்மா என்று கண்ணீர் வடித்தாள்
நான் மன்னித்து விட்டால் அதனால் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்ற நம்மிக்கை உங்களுக்கு இருக்குமானால் உங்கள் நம்பிக்கை உங்களை மன்னித்து விட்டது நலமாக இருங்கள் என்று சொல்லி அனுப்பினாள் ஸ்வாதி
அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும்.
தேடுவதே கிடைக்கும்.நினைப்பதே நடக்கும். நல்லதையே தேடுவோம்... நல்லதையே சிந்திப்போம் நல்லதே நடக்கட்டும்!
°°°°°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்.