நானும் காத்திருந்தேன் குளக்கரையில்
கொக்கு காத்திருந்தது
குளக்கரையில் உறுமீன் வர
காத்திருந்து காத்திருந்து ஏமாந்து
சிறகு விரித்து வானில் பறந்தது ...
கொத்தும் விழியில் மீனாடும் நீ வர
நானும் காத்திருந்தேன் குளக்கரையில்....
காத்திருந்து காத்திருந்து ஏமாந்து .....
தூண்டிலால் மீன் பிடிக்கலாமோ என்று எண்ணியபோது
அட் லாஸ்ட் நீயும் வந்தாய் கண்களில் கயலாட
என் மனமும் சிறகு விரித்து வானில் பறந்தது !