அவள்

அன்றவள் மலரின் மொட்டுபோல் வளரும்
பருவத்தில்… சிறுமியாய் அவளுடன் வயதில்
சற்றே பெரிய சிறுவனான என்னுடன் ஓடி
விளையாடி வந்தாள்; நாங்கள் ஒன்றாய்
கண்ணாமூச்சி , நொண்டி விளையாடுவோம்
என் பின்னே அவள், என் சட்டையைப்பிடித்து
குக்கூ என்று கூவி 'ரயில்' விளையாட்டு ஆடுவோம்

இன்றவள் மலர்ந்த குண்டுமல்லிப்பூப்போல்
மடந்தை, பாவாடை தாவணியில் நாணி கோணி
வந்து நிற்கின்றாள் என்முன்னே ; தலை நிமிர்ந்து
கூட என்னைபார்க்க தயக்கம் , நாணம் தாக்க
கால்விரல்களால் ஏதோ கோலம் போடுகிறாள்
மண்ணில் ……...என்ன நேர்ந்தது இன்று இவளுக்கு
ஒன்னும் இல்லை பருவம் வந்து சேர்ந்தது கூடவே
பெண்ணிற்கு இயற்கையும் நாணம்,அச்சம்
பயிர்ப்பு ……..நான் பாரதிருப்பதுபோல் இருக்க
அவள் என்னைப் பார்க்கின்றாள் …….பார்வையில்
ஓர் ஏக்கம், ஓர் ஆவல், ஓர் ஆதங்கம் …………..
அத்தனையும் தாங்கி இருக்க கண்டேன் நான்
அது சொல்வதுபோல் இருந்தது ,'மாசியில்
மல்லிகைப்பூவானேன் என் ஆசை மச்சானே
இந்த உயிர் இனி என்னிடம் இல்லை உன்னிடம்
தஞ்சம் அறிந்திடுவாய்….. நீ என்னை கை
பிடிக்கும் நாள் எதுவோ …..' என்று …...ஆம், அவள்
இப்போது அவள் சிறுமியும் அல்ல நான் சிறுவனும்
அல்லன்……..இலவங்கிளிபோல் எனக்காக
காத்திருக்கும் என் ஆசை அத்தை மகளல்லவோ
அவள் எனக்கு .

மாறிவரும் பருவங்களில் மனிதன் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Feb-19, 3:51 pm)
Tanglish : aval
பார்வை : 209

மேலே