அம்மா எனும் நாமம்

தாலாட்ட வழியில்லை
தொட்டில் மட்டும் கட்டினாள்
பாலூட்ட விதியில்லை
பாலூட்டும் அறை வைத்தாள்
உணவூட்ட கதியில்லை
உணவகம் திறந்தாள்
ஆதலால்தான்
பெற்றவள் தவிர
மற்றவளுக்குக் கிட்டாத
அம்மா எனும் பதவிக்கு
உற்றவளானாள் - இந்த
உன்னதத் தலைவி

ஆயிரத்தில் ஒருவனில்
ஆடியே மயக்கினாள் ஒருத்தி
அதிசயிக்கிறோம் நாங்கள்
அவளை மனதில் நிறுத்தி
போராடியே வென்றாள் - புரட்சியைப்
பெண்மைக்குள் பொருத்தி
ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து
எதிரிகளைப் பொசுக்கிய ஒரு தீ

சந்தியா ஈன்றெடுத்த
தூங்காத ராகம்
சாவிற்கு உணவானதுதான்
தாங்காத சோகம்
தெய்வத்தாய் பிரிவினிலே
தேய்ந்த மக்கள் தேகம்
கண்ணீரைத் தேக்கிவைத்து
பொழியாத மேகம்

ஈரமோடு மக்களுக்கு
உதவிகள் ஈந்த நிலா
சரித்திரத்தில் இடம்பெற்று
சாதித்த சாந்த நிலா
வெண்ணிற ஆடையில் மூலம்
துள்ளிவந்த வெள்ளிநிலா
கண்ணீர் ஓடையில்
கரைந்துவிட்ட கன்னி நிலா

திரையிலும் நாடகத்திலும்
திறமையாய் நடித்தாள்
உலகின் அனுபவங்களை
உள்ளார்ந்து படித்தாள்
வாழ்வில் பல காலம்
தனியாய் தவித்தாள்
துணிவெனும் துணியைத்தான்
துணையாய் அணிந்தாள்

நெஞ்சத்தில் பதிந்த
சொர்னத் தாரகையே
வஞ்சத்தில் வீழ்ந்த
கர்ணனைப் போல
வாழ்வில் மடிந்த
வண்ணப் பூங்கொடியே
தமிழினம் தவிக்குது
திரும்பிடு தேவதையே

முயற்சி கற்கும் மாதருக்கு
முதிர்ச்சித் தலைவி
வறுமையை நீக்கி வனப்பு தந்த
வளர்ச்சித் தலைவி
பகைவர்களின் பார்வைக்கு
மிரட்சித் தலைவி
அன்பு காட்டும் தொண்டருக்கு
புரட்சித் தலைவி

லாட்டரியில் பேட்டரியை
லாவகமாய் நீக்கி
அப்பாவிகள் அடுப்பில்
அக்கினி மூட்டிய
ஆனந்த அன்னையே
மழைநீரை பேணிக்காக்க
மதிநுட்ப வழிசெய்த
மந்திரச் செல்வியாய்
ஆராதிக்கிறோம் உன்னையே

வாழ்விடம் விடுத்து
வானிடம் சென்றாய்
மங்கையர்குல திலகமாய்
மானிடம் வென்றாய்

தர்மமாய் வாழ்ந்து
தர்மம் செய்து
தர்மத்தைப் போற்றிய
தர்மம் தேவதை நீ
அதே நேரத்தில்
மர்மத்தில் பிறந்து
மர்மமாய் வாழ்ந்து
மர்மத்தில் மடிந்த
மர்ம தேவதை நீ

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (24-Feb-19, 5:39 pm)
Tanglish : amma yenum naamam
பார்வை : 731

மேலே