பசியில் நாய்க்குட்டிகள்
தயக்கம் வேண்டாம் தம்பிகளே
தாயவள் கொணர்வாள் நமக்குணவு,
பயமெதும் வேண்டாம் பிள்ளைகளே
படுத்தி டுங்கள் தரையினிலே,
வயிறு பசித்தால் மனிதர்தான்
வழிமுறை யெல்லாம் மறந்திடுவார்,
உயிராய் மதிக்கும் நன்றிகாட்டி
உணவுடன் வருவாள் நம்தாயே...!