காதல் என்றால் என்ன?

நான் எங்கோ தொலைந்து விட்டு,
உன்னிடம் என்னை தேடுவதே
காதல்!
எதையோ நான் பேச தொடங்கி,
உன்னை பற்றி பேசி முடிப்பதே
காதல்!
எனக்குள் எழும் கேள்விகளுக்கு,
உன் கண்கள் சொல்லும் பதிலே
காதல்!
மொத்தத்தில்...........
விடை இல்லா விடுகதை தான்
இந்த (கால) காதல்.............!

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (31-Aug-11, 6:48 pm)
சேர்த்தது : நா சதீஸ்குமார்
பார்வை : 476

மேலே