கூற்றமே இல்லிற்கு இசைந்தொழுகாப் பெண் – மூதுரை 27
நேரிசை வெண்பா
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம்
அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம் - மெல்லிய
வாழைக்குத் தானீன்ற காய்கூற்றங் கூற்றமே
இல்லிற் கிசைந்தொழுகாப் பெண். 27 – மூதுரை
பொருளுரை:
கல்வியறிவு இல்லாத மக்களுக்கு கற்றறிந்தவரு டைய கடுஞ்சொல் எமனாகித் துன்பம் செய்யும்.
தர்மத்தில் விருப்பம் இல்லாத மனிதர்க்கு தருமமே எமனாகும்.
மெல்லிய வாழை மரத்துக்கு அம்மரத்தில் காய்க்கும் காய்களே எமனாகும்.
அது போல, இல்வாழ்க்கைக்குப் பொருந்தி நடவாத பெண் அவள் கணவனுக்கு எமனாவாள்.
கருத்து:
கற்றறிந்தவருடைய கடுஞ்சொல் கல்லாதவர்க்கும், தருமத்தினால் பாவிகளுக்கும், பொருத்தமில்லாத மனையாளால் கணவனுக்கும் துன்பம் விளையும்.