காதலித்து பார்

எத்தனை நாள் காத்திருக்க
உன் ஒற்றை புன்னகைக்காக...
காதலில் விழுந்து பார்
என்னோடு ஒரு கணம் ...
விடியல் எல்லாம் புத்தம்
புதியதாய் தோன்றும்
கடிந்து நான் பேசினாலும்
கரும்பாய் இனிக்கும்
கரந்த பசும்பாலாய் என்றும்
உன் முகம் மணக்கும்...
மறந்து போன என் பிறந்த
தேதி ஞாபகத்திற்கு வரும்
அடிக்கடி கண்ணாடியில்
முகம் பார்க்க தோன்றும்
அடுப்படியில் எனக்காக
தினம் சமைக்க தோன்றும்
ஆதலால் காதலித்துப் பார்...
இல்லை காதலிக்க பட்டுப் பார்....