காதல்

நம் முதல் சந்திப்பே மோதலில்தான்
இரு ஆட்டுக்கடாக்கள் கொம்போடு கொம்பு
மோதுவதொப்ப , நான் நினைத்துக்கூட
பார்க்கவில்லை அந்த மோதலின் பின்னே
இப்படியோர் காதல் பிறக்குமென்று
இன்று நம் இரண்டாம் சந்திப்பு, அதில்
நம் பார்வையின் பரிவர்த்தனை ,
அனல் ஏதும் பிறக்கவில்லை , மாறாய்
தென்றலின் இதம் தந்ததே பார்வை
நீ புன்னகைத்தாய் அது மோனலிசாவின்
புன்னகையாய்த் தோன்றியதே எனக்கு,
இன்னும் சொல்லப்போனால் உன் பார்வையில்,
உந்தன் புன்னகையில் பெண்ணே,
கொளுத்தும் கோடையில் சற்றும்
எதிர்பாராமல் வந்த முதல் மழைச்சாரலின்
குளிர் கண்டேன் இன்பம் கண்டேன்
அதில் புதுவசந்தம் கண்டேன் நான்.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
என் காதலியைக் கண்டுகொண்டேன்
நிலவின் குளிரைக் கண்டுகொண்டேன்
பொதிகையில் உதித்த இளம் தென்றலைக்
கண்டுகொன்டேன் அது காதலை
என்னுள்ளத்தில் முட்ட முட்ட பரப்பிட
பரப்பி என்னை திக்குமுக்காட செய்தலைக்
கண்டேனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (28-Feb-19, 9:03 am)
Tanglish : kaadhal
பார்வை : 98

மேலே