பேராற்றல் பெண்மைக்கு

பலங்கொண்ட உடலுக்கு பதைபதைக்கும் மனமே எதிரி
உணர்வுள்ள உள்ளத்துக்கு ஒழுக்கக்கேடே எதிரி
உழைக்காமல் வாழும் உலகத்தோருக்கு உணவே எதிரி
அரசியல் பிழைப்போர்க்கு அவரவர் நாவே எதிரி
அதிகாரம் மிக்கோருக்கு அடங்காமல் செல்வோரே எதிரி
அன்றாடம் உழைப்போர்க்கு அளவில்லா செலவே எதிரி
பேராற்றல் பெண்மைக்கு புறம் பேசுதலே எதிரி
உழுது வாழ்பவனுக்கு காரும் கதிருமே எதிரி
சமாதானம் செய்பவனுக்கு நீதியும் நேர்மையும் எதிரி
செல்வம் சேர்ப்பவனுக்கு தானமும் தர்மமும் எதிரி
சகித்து வாழ்பவனுக்கு நிகழும் அனைத்தும் எதிரி.
-- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (28-Feb-19, 6:08 pm)
பார்வை : 334

மேலே