பாறையை உண்டு பலவானாய்
பருவத்தில் பொழியா மழை
எவ்விதைக்கும் மகசூல் தரா நிலம்
எச்செயலையும் குரூரமாய் பார்க்கும் மனம்
பெற்றோருக்கு ஒத்துழையா பிள்ளைகள்
பெண்டிர் மகத்துமாறியா இளம் கன்னிகள்
பேடுவின் துயரம் புரியா பெண்கள்
பெண்களின் உள்ளம் தெரியா ஆடவர்
பெருமைக்கு கடன் வாங்கும் இல்லத்தார்
பொறுமையை கற்றுக் கொள்ளா குழந்தைகள்
அதிக வேகத்தை விரும்பும் அகிலத்தார்
அரசின் இலக்கணம் அறியா ஆட்சியாளர்
கெடுதலை கடைவிரிக்கும் வணிகர்கள்
பணத்திற்கு அடிமையான அரசூழியர்
தரமில்லா நவீன ஊடகங்கள்
உழைக்கும் எண்ணமில்லா உலக மாந்தர்
நவீனப் பெயரில் நாராசத்தை திணிக்கும் அறிவியல்
அண்டசராசரமும் கைக்குள் வந்தபின்
அரிதாகி போன பாசம் நேசம் மனித நேயம்
இவைகளினூடே வாழ்வது என்பது
பாறையை உண்டு பலவானாய் வாழ்வது போன்றது
-- - நன்னாடன்