தொடர் வண்டி

வெள்ளையர்கள் கண்டுபிடிப்பில்
வெகுஜெனங்களை கவர்ந்த படைப்பு
வெவ்வேறு வழித்தடத்தில் வேளைக்கு ஒன்று என
வெள்ளோட்டம் விட்டு பார்த்தால் வெற்றிகளே

அசகாயசூரன் போலே அநாயசமாய் ஓடும் இது
அல்லல்களை குறைக்கக்கூடிய அவசிய வாகனம்
சகல வசதிகளையும் தன்னகத்தே பெற்றது
இயலாத பேருக்கெல்லாம் இனிதான போக்குவரத்து

குறைவாக துட்டிருப்பின் அதுவே அற்றிருப்பின்
நிறைவான பயணம் செய்து நினைத்தயிடம் சேரலாம்
ஓடலாம் ஆடலாம் ஓங்கி ஓங்கி குதிக்கலாம்
உறங்கலாம் உருளலாம் உடையை இங்கே மாற்றலாம்

கடைநிலை வாக்காளர் முதல் ஜனாதிபதி வரை
பயணிக்க பலவகை பெட்டிகள் பகுப்பாய் உண்டு
உணவும் உற்சாக பானமும் ஊடே உண்டு
ஒரு முறையேனும் பயணிக்க சிறந்தது இது.
ooooo நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (1-Mar-19, 5:26 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : thodar vandi
பார்வை : 251

மேலே