இருப்பதில்லை இறப்பதில்லை
![](https://eluthu.com/images/loading.gif)
பொய்கள் இருப்பதில்லை
உண்மைகள் இறப்பதில்லை
தொட்டுவிடும் தூரம்தான்
உண்மைகள் என்றாலும்
சட்டென்று கண்களுக்கு
தெரிவதில்லை
உண்மையாய்..,
தொடமுடியா தூரம்தான்
பொய்கள் என்றாலும்
கைக்கெட்டும் தூரம்போல்
தோன்றும்
பொய்யாய்..,
பொய்கள் இருப்பதில்லை
உண்மைகள் இறப்பதில்லை