மாயாவி

வாரி இறைக்க ஒரு கூட்டம்
வாசகங்களை தெளிக்க ஒரு கூட்டம்
தனித்து நிற்க ஒரு கூட்டம்
தனித்துவமாய் ஒரு கூட்டம்

தத்துவமாய் ஒரு கூட்டம்
தணிக்கைகென ஒரு கூட்டம்
தரத்தை உயர்திட ஒரு கூட்டம்
தரத்தை குறைத்திட ஒரு கூட்டம்

பண்புமொழி பேசிட ஒரு கூட்டம்
பகட்டு மொழி பேசிட ஒரு கூட்டம்
பண்பை மறந்த ஒரு கூட்டம்
பணிந்து பேசிடும் ஒரு கூட்டம்

முகமூடியணிந்த ஒரு கூட்டம்
முகவரியில்லா ஒரு கூட்டம்
முகத்தை தொலைத்த ஒரு கூட்டம்
முகமதை தேடும் ஒரு கூட்டம்

வார்த்தைகளை தேடும் ஒரு கூட்டம்
வாசனைகளை முகரும் ஒரு கூட்டம்
வருத்தமில்லா ஒரு கூட்டம்
வருத்தத்துடன் ஒரு கூட்டம்

வஞ்சனையுடன் ஒரு கூட்டம்
வாஞ்சையுடன் ஒரு கூட்டம்
வசீகரத்துடன் ஒரு கூட்டம்
வசியம் தேடி ஒரு கூட்டம்

எத்தனையோ கூட்டமிது
எண்ணிக்கையடங்கா கூட்டமிது
எண்ணங்களை உணர்வாக்கிய கூட்டமிது
கண்ணாடியாய் பிரதிபலிக்கும் கூட்டமிது

எத்திசையும் நீயாக
எந்தனது சிந்தையும் நீயாக
நினைவுகளை தாலாட்டும்
எழுத்தே நீ...
மாயாவியோ....?

எழுதியவர் : சா.மனுவேந்தன் (1-Mar-19, 3:18 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : eluthu
பார்வை : 208

மேலே