அவள் புன்னகை

பெண்ணே உந்தன் கொவ்வை இதழ்கள்
ஓரத்தில் நான் காணும் உந்தன் புன்னகை
வெறும் புன்னகை அல்ல ஒரு போதும்,
அது புன்னகைக்கோர் களஞ்சியம்
இன்னும் ஒரு படி மேல் சென்று சொல்வேன்
உந்தன் புன்னகையே ஓர் கலைக்களஞ்சியமடி
நித்தம் நித்தம் நம் சந்திப்பில் அதில்
நான் ஒரு புது காதல் அத்தியாயம் பூவாய்
மலர்ந்து வாசம் பரப்புவதைக் காண்கின்றேன்

நான் மயங்கும் காதல் புன்னகைக்
களஞ்சியமடி எனக்கு நீ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (2-Mar-19, 10:21 pm)
Tanglish : aval punnakai
பார்வை : 441

மேலே