கனவுப் பயணத்தில்
கால இயந்திரத்தின் கதவுகளைக்
காதல் நினைவெனுஞ் சாவியால் திறந்து
கடுகதி வேகத்தில்
பின்னோக்கிப் பயணிக்கிறேன்...
கலைத்திட முடியாத
மோனத் தவத்தில் அங்கே
காதல் புறாக்களாய்
நீயும் நானும்...!
கன்னத்தைக் கிள்ளுவதுணர்ந்து
ஏனடி என்கிறேன்
கல கல எனச் சிரிக்கும் சத்தம்
ஓ...! அது நீயில்லை!
என் செல்ல மகள்!
✍️. தமிழ்க்கிழவி.