நிலா எனக்கு
நிலவிற்கும் எனக்கும்
எப்போதுமே ஓர் தனி ஈடுபாடு
நிலவு பூமிக்கோர் உபகிரகம்
பகலவன் தந்த ஒளியால்
இரவில் தன்னொளி பரப்புகிறது
கடலின் அலைகளை உயர உயர
தன ஆகர்ஷணத்தில் மேலிழுக்கும் நிலவு
மனிதன் நினைவலைகளையும் மேலிழுக்கும்
கவிஞனின் கற்பனையோ இதில்
ஆர்ப்பரிக்கும் நிலவின் தனி அலைகள்
நிலவை வெறும் கல்லும் மண்ணும் கொண்ட
சிறுகோள் என்று அறிந்தும் நாம்
ஜோதிடத்தில் சந்திரனாய் பூசிப்பது …?
கல்லிலும் மண்ணிலும் மறைந்திருக்கும்
மறையோனை நினைந்தல்லவா …
கவிஞன் நான் நிலவில் காதலியை
காதலனை காதலிக்கு தூதுவனைக்
காண்கின்றேன் …..இது கற்பனையில்
நான் காணும் கனவு நிலா என் மனதில்
என்றும் நிலவும் வண்ண நிலா ,பால் நிலா
இறையனார் சிரசில் தங்கிய பிறை நிலா
அதைக்கண்டு நான் பித்தா பிறைசூடிய
பெம்மானே என்று நித்தம் பூஜிக்க