மகளிர் தின வாழ்த்து
இன்பங் கொடுத்து இன்பம் பெறும்
இலக்கிய கொடையே
ஒரு துளி அணுவால் அரு உயிரை ஆக்கும்
ஆல மர தருவே
அன்பினை ஊட்டி அழகுர வளர்க்கும்
அகத்தின் பல்கலையே
அனைத்துயிரும் போற்றும் ஆதி வேராய் வாழும்
அறிவு நிறம்பிய அழகு சிலையே
ஆடிடும் காற்றும் ஓடிடும் நீரும் உலகில் உள்ளவரை
கூடிடும் உன் புகழ் ஒளிவிடும் கதிராய்.
- நன்னாடன்