கற்றதும் கல்லாததும்

கடற்கறைசென்றடைந்த நான்
ஓரிடத்தில் உட்கார்ந்து ஒருபிடி
மணலைக் கையில் எடுத்தேன்
என்னுடன் வந்திருந்த என் பேரன்
'தாத்தா உன் கையிலுள்ள மணலில்
எத்தனை மணல் மணிகள் உள்ளன
கொஞ்சம் சொல்லுங்களேன் ' என்று
கேட்டான் அதை எண்ணுவது மிகக் கடினம்
என்றேன் ,அதற்கவன் அப்போ இந்த
கடற்கரையில் உள்ள மணலில்
உள்ள மணல்மணிகளை எண்ணிடவும்
முடியாதே தாத்தா என்றான் ……….
மாமேதை ஐசக் நியூட்டனும் இவ்வாறுதான்
யோசித்ததாய் எங்கோ படித்தது
நினைவுக்கு வர என் பேரன் இந்த
சிறுவயதில் இதையே கேட்டது என்னை
ஆழ்த்தியது ஆச்சரியக் கடலில்

மனதில் தெளிந்தேன். ஆண்டவன்
படைத்த ஒரு பிடி மணலிலுள்ள
மணல் மனைகளை எண்ண முடியலையே
அவனை நாம் இந்த மணலின் ஒரு மணிபோல்
அடைந்த நம் அறிவைக்கொண்டு அறிய
முயல்வது கயமையே என்று தெளிந்தேன்

'கற்றது கைப்பிடி மணலின் ஒரு மணிதான்
கல்லாதது கடற்கரை மணல் அளவு ..???
இறைவனைப்பற்றி ……. நாம் கல்லாதது
அப்படி நாம் கற்றுவிட்டால் காண்போமா
அப்பரம்பொருளை ………???????



.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (8-Mar-19, 12:31 pm)
பார்வை : 78

மேலே