நீர்த்து போனேன் நானும் மெழுகாய் 555

என்னுயிரே...


மெழுகு வர்த்தியாய்

இருந்த என்னை...


உன் கண்களால் காதல்

தீ பற்ற வைத்தாய்...


புது வெளிச்சமாக

எரிந்துகொண்டே...


உனக்காக உருகினேன்

உன்னையே நினைத்து...


வேடந்தாங்கலில் வந்து

செல்லும் பறவை போல...


விரைவாகவே என்னை

மறந்து சென்றாய்...


நீர்த்து போனேன்

நானும் மெழுகைப்போல...


என் இதழ்களில் புன்னகை

பூக்க செய்தவள் நீ...


இன்று புன்முறுவல்கூட

வலிகளுடனே உன்னால்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (11-Mar-19, 9:00 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 651

மேலே