வலி

உள்ளங்காலில் குத்திய
முள்ளின் வலி

மருத்துவர் குத்தும்
ஊசியின் வலி

குத்தியபோதும் வெளியே
எடுத்தபோதும் வலி

கொஞ்சநேரம் மட்டும்

முள்மாதிரியே சரக்கென்று
நுழைந்தாய்

எனகுள்ளே இருந்தாய்
சந்தோசமாய்

இருந்தது வலியில்லை

யார் எடுத்ததுன்னை
வெளியே

நீயில்லை என்றானதும்

நிரந்தர வலியானதே

தெரியுமா அந்த
வலி உனக்கு?

எழுதியவர் : நா.சேகர் (11-Mar-19, 5:00 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vali
பார்வை : 565

மேலே