வலிகளை சுமந்துகொண்டு நானும் 555

உயிரே...


உன்னை மட்டும்

நினைத்து துடித்ததால்...


அன்று என் உயிர்

நண்பன் இதயம்தான்...


எப்போதும்
உன்னையே
நினைத்ததால்...


நீ என்னை தூக்கி

எறிந்த பிறகு...


உலகில் எனக்கு ஒரே
எதிரி
என் இதயம்தான்...


உன்னை மறக்க

நான் நினைத்தாலும்...


உன்னையும் உன் நினைவுகளைம்

சுமந்து கொண்டே வருகிறது...


உயிர் நண்பனே

எதிரியானால்...


உறக்கமும் நிம்மதியும்

ஏது மனிதனுக்கு...


வலிகளோடு

வாழ்கிறேன் நானும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (13-Mar-19, 8:08 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1120

மேலே