பெண்ணியம்

பெண்ணியம்....
பெண்களின் வளர்ச்சி...
பெண் சுதந்திரம்...
பெண் சுய மரியாதை...
இதில் இயம் எங்குள்ளது...?

சுதந்திரம்...
சுயத்தை நிலை நாட்ட
தனியாக நடைபோட
தரணியெங்கும் புகழ் பெற
இரவில் பெற்ற சுதந்திரம்
இரையாக..
சதை பசி கொண்டோரின்
இரையாக...

தனித்துவம்...
தனிமையை நாடிட
தனிமையில் தன்னை இழந்திட
தன் போன்ற பிறருக்கு
தன்னை இழக்க வழிவகுத்திட..
இதுதான் தனித்துவமோ...?

சரித்திரங்கள் பல படித்திட்டோம்
சாத்திரங்கள் பல பார்த்திட்டோம்
சரியான பாதை தேர்ந்திட்டோம்
சரிவுகளை சந்தித்திட்டோம்
இதுதானே எங்கள் பெண்ணியம்...

தாய்மை என்று அழைத்திட
தனித்துவமே முதலாச்சு...
தரம்கெட்ட செயல்களிலே
தனித்துவமும் மூழ்கிப் போச்சு...

எழுதியவர் : சா.மனுவேந்தன் (13-Mar-19, 9:04 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
Tanglish : penniam
பார்வை : 1298

மேலே