தத்துவம்

நல்லதைக் காண கண்கள் தந்தான் இறைவன்
நல்லவற்றைக் கண்ட கண்கள் தீயவற்றைக்
காணாமல் இருப்பதில்லை தீயவற்றைக் கண்டு
அவ்வாறான தீயவை நிகிழ்ந்திடாமல் நீயுன்
வாழ்வை அமைத்துக்கொள்ள கண்களால்
தீயவற்றையும் காணவைத்தானே அவன்

காதுகள் இரண்டு தந்தான் இறைவன்
நல்லவற்றையெல்லாம் கேட்க ஒன்றில்
தீயவைக் கேட்பின் ஒன்றில் கேட்டு
மற்றொண்டின் வழியாய் வாங்கியதை விட்டுவிட

நாக்கு தந்தான் பல்சுவையுணர நாவால்
நல்லதை எப்போதும் பேசி பழக -நல்ல
இறை நாமங்களை பாடி இன்புற ஒருபோதும்
தீய வாக்கு சொல்லாமல் இருக்க

கைகளிரண்டும் கால்களிரண்டும் தந்தான் அவன்
உழைத்து வாழவேண்டும் என்பதற்கு பிறர்
உழைப்பில் வாழாதிருக்க

அறிய மூளையை நமக்களித்தான் இறைவன் அது
நாம் படைத்த அல்ப கணினியைவிட எத்தனையோ
எத்தனையோ மடங்கு சக்திவாய்ந்தது அதை
நாம் யுக்தியாய் பயன்படுத்த நம்மை நாம்
வாழ்வில் ஏற்றிக் கொள்ளலாம் பிறர்க்கும்
வாழ வழி kaatti

இப்படியே மனிதன் வாழ நினைத்தால்
தீய எண்ணங்கள் ஒருபோதும் அவனை நாடாது
தூய மனிதர்கள் நடமாடிடும் உலகு பின்
தேவா லோக மாகுமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Mar-19, 4:28 pm)
Tanglish : thaththuvam
பார்வை : 654

மேலே