தேர்தல் கூட்டணி
தேர்தல் கூட்டணி 😎
கூட்டணி என்ற பெயரில்
பல கூத்துக்கள் நடக்கிறது
வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை சகிதமாக
கூட்டம் கூட்டமாக கூடுகிறது
பொய்யாய் சிரிக்கிறது
திருட்டு மொழி முழிக்கிறது.
கட்டு கட்டாக பணம் கை மாறுகிறது
கொள்கையை காற்றில் பறக்க விடுகிறது
காற்றுள்ளபோதே தூற்றி கொள்கிறது.
காந்தியார் சிரிக்கும் தாளை பார்க்கிறது
நேற்றைய எதிரி இன்றைய நண்பன் என்கிறது
மனசாட்சியை கழட்டி தூர எறிகிறது.
அரசியலில் நிறந்திர எதிரியும் இல்லை
நிறந்திர பகைவனும் இல்லை என்று பொய் சொல்கிறது
மகா கூட்டணி, மக்கள் கூட்டணி என்று ஊளை இடுகிறது .
கைமாறியது அத்தனையும் மக்கள் பணம்
மக்களின் நலனுக்காக கொடுக்கப்பட்ட கொள்ளை அடித்து பணம்.
கடை தேங்காய் எடுத்து வழி பிள்ளையார் உடைத்த கதை.
அரசியல் என்ற பெயரில் அட்டூழியம் அறங்கேகிறது.
ஆளாய் பறந்து ஆட்களை சேர்கிறது
அற்ப பணத்திற்கு, பிரியாணி பொட்டலத்திற்கு, குவாட்டருக்கு, அணல் பறக்கும் வெய்யிலில் வாழ்க! வாழ்க!
என்ற
ஓலம் இடுகிறது.
திருந்தாத மக்கள் கூட்டம் திசை மாறினால் ஒழிய இந்த அரசியல் அயோக்கியர்களை ஒரு போதும் ஒழிக்க இயலாது.
- பாலு.