ஆண்கள் மனதில் மங்காத்தா ஆடும் பெண்களே..........
![](https://eluthu.com/images/loading.gif)
ஆண்கள் மனதில்
மங்காத்தா ஆடும்
பெண்களே
உங்களால்
மதி இழந்து
மானம் இழந்து
வாழ்க்கையை இழக்கும்
ஆண்கள் வர்க்கத்தை
சற்று சிந்தித்து பாருங்கள்
முன்னொரு காலத்தில்
சேலை கட்டி மானம் காத்த
பெண்கள் பிறந்த நம் பூமியில்
பெண்களை பார்த்தால் வணங்கி
செல்ல தோன்றும்
இன்றோ முழங்கால் வரைக்கும்
பாவாடையும் நெஞ்சி தெரிய
துணி உடுத்தும் அவலத்தாலும்
பெண்களை வணங்கி சென்று
தூய்மையாய் வாழ்ந்தவன் கூட
சபலம் தட்டிச்செல்லும் நிலைமைக்கு
தள்ளபடுவது உங்களால் தான்
பெண்களே நாகரீகமான
நம் கலாசார முறை இருக்கும் போது
மேல் நாட்டு கலாசார முறை எதற்கு....?
பெண்ணினத்திற்கு பெருமை சேர்க்கும்
பட்டு சேலைகள் இருக்க
மேல்நாட்டு அரை குறை ஆடைகள்
எதற்கு....?
ஆண்கள் மனதில்
மங்காத்தா ஆடும்
பெண்களே
ஆண்கள் நல்லவனாய் வாழ்வதும்
கெட்டவனாய் மாறுவதும்
இறைவன் கொடுக்கும் வரமல்ல
பெண்கள் கொடுக்கும் வரம்
பெண்ணினமே
ஆண்களின் மனதை புரிந்துகொள்
இல்லைஎன்றால்
நீங்கள் எறியும் கல்
ஒருநாள் உங்களையே தாக்கும்
அன்று அழுதும் பலனில்லை
புலம்பியும் பயனில்லை............