ரௌத்திரம் பழகு
பெண்கள் நாங்கள்
பெண்ணாய் பிறந்ததிற்கு
பலமுறை வருந்தியிருக்கிறோம்
இருப்பினும் விரும்பியே
பெண் பிள்ளையை பெற்று கொள்கிறோம் இன்று
அசிங்கத்தில் மூழ்கி போகும்
சில வெற்று ஆண்வர்கத்திற்கு
படிப்பினையாய் அமைவோம் என்று
உறுதி எடுத்து
வெற்றி காணுவோம்
பாரதி காண விரும்பிய
புதுமை பெண்டிராய்
உருவெடுக்கும் நாள்
வெகு தொலைவில் இல்லை
பொள்ளாச்சியில் பரபரப்பு இன்று...
எதனால்???
பெண்ணே....
நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வை
எல்லாம் சரிதான்...
காதல் பார்வையா இல்லை
காம பார்வையா என
பிரித்தறியும் பகுத்தறிவு
இல்லாமல் போனதை எண்ணி
நெஞ்சு பொறுக்குதில்லையம்மா
வா என்றால்
பின்னாலே செல்வதற்கு
நீ ஒன்றும் பொம்மயலம்மா
எதிர்த்து நின்று
மிதித்து விடு
என்று வாய் கூறினாலும்
அங்கு உன்னால் என்னால்
என்ன செய்திட முடியும்
என்றே மனமும் தான் கலங்குதம்மா...
மூலையில் உட்காரும் அளவு சென்றாய் என கேள்வி பட்டேன்
மூளை இல்லா கோழை நாய்கள்
மூச்சு விடாமல் போகும் வரை
முயற்சிதனை கைவிடாது
முட்டி மோதி கொன்றுவிடலாம்
தைரியமாய் இரும்மா.....
-ஷாகிரா பானு💝
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
