எனதருமை காதலி
எத்தனை சண்டைகள்
எத்தனை சந்தோஷங்கள்
மறக்க முடியாத அனுபவம் தான் இந்த காதல்....
காதலித்த இத்தனை நாளில்-நீ என்னை செல்லமாக காயப்படுத்தியதே அதிகம்......ஆனால்
அதுவும் புதிதாக இருந்தது இந்த மடயனுக்கு....
எனக்குள்ளும் ஒரு குழந்தை தனம் உண்டு என்று காட்டியவள் நீ.....
கெஞ்சல்கள்,கொஞ்சல்களை எல்லாம் எனக்கு புதிதாக காட்டியவளும் நீ.....
நீ கோபபடுத்தும் போதெல்லாம் சுவர்களுக்கு முத்தம் கொடுக்கும் என் கைகளுக்கு மட்டுமே தெரியும் என் கிறுக்குதனமான காதல்........
சந்தோஷங்களை வாரியிரைத்தவள் நீ
சோகங்களை அள்ளிகொடுத்தவளும் நீ
என் கண்ணீரின் அர்த்தம் தெரியவைத்தவளும் நீ
முயற்சிசியே சொல்லிகொடுத்தவளும் நீ
இது தான் காதல் என்று புரியவைத்தவளும் நீ
உன்னோடு நான் பேசிய தொலைபேசிகளும் நீ அனுப்பிய குறுஞ்செய்திகளுமே நான் தனிமையில் இருப்பதையே மறக்க செய்கிறது என் அழகு தேவதையே...
அழகான காதல்
அழ வைத்த காதல்
சந்தோஷமான காதலை தந்த
என் குட்டச்சிக்கு
நன்றி நன்றி நன்றி ......