நினைத்து திரியும்

என்னடா பக்தி இது இலக்கு அறியாமலே
எச்செயல் செய்வீனும் இறைவன் காப்பானென்று
அறம் தாழ்ந்து செய்பவனும் அறிவின்றி செய்பவனும்
சிரம் தாழ்ந்து வணங்கி விட்டால் சிறப்பென்று
சிற்றறிவு கொண்ட கும்பலின் சால கண்டுபிடிப்பு
பெட்டி நிறைய பணத்தைக் கொட்டி
பெரியதாக கோயில் கட்டி பெயரையதில் பதித்துவிட்டு
கெடுஞ்செயல் எது செய்யினும் கட்டிய கோயிலில்
வீற்றிருக்கும் கடன்பட்ட கடவுள் அவன்
கடுந்துயரை நீக்கல் அன்றி வேறு தொழில்
என்னவென்று ஆண்டு முழுதும் கட்டளையிடும்
பண அருள் நிறைந்த பக்தனின் அடிமையென
நினைத்து திரியும் அன்பு பக்தர்களின்
பக்திதான் நம்மை சிலிர்க்க வைக்கிறது.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (20-Mar-19, 7:17 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : ninaiththu thiriyum
பார்வை : 207

மேலே