காத்திருக்கிறேன்

தகிக்கும் சூரியக்
கனல்

காய்ந்து வெடித்த
பூமி

கருமேகம் காணா
வானம்

மழைபார்த்து காத்து

நிற்கும் விவசாயி

இந்த வரிசையின்
அருகில்

சந்திரனை காண
காத்திருக்கும்

அல்லியாய் நானும்

காத்திருக்கிறேன்

என்னவனே
எனக்கானவனே

நான் தான் என
அடையாளம்

காட்டிடு உன்னை
காணவே

நானும் ஆவலாய்
பூத்திட

காத்திருக்கிறேன்

எழுதியவர் : நா.சேகர் (20-Mar-19, 7:17 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaathirukiren
பார்வை : 1597

மேலே