தேர்தல் வாக்குறுதிகள்

தேர்தல் வாக்குறுதிகள் .

தண்ணீரில் எழுதிய அலங்கார வார்த்தைகள்
வரிசையாக கட்டப்பட்ட
விரைவில் வெடிக்க போகும் வண்ண பலூன்கள்
அழகான காகித பூக்கள்
குழந்தைகள் கட்டும் மணல் வீடுகள்
முருங்கை மரத்து கிளைகள்
பெரியார் சொன்ன வெங்காயம்
காலி பெருங்காய டப்பா
இரவு முழுவதும் கொக்கரித்து
காலையில் தூங்கும் முட்டாள்களின்
கூக்குரல்
மொத்தத்தில் ஏட்டு சுரக்காய்
கறிக்கு உதவாது.
- பாலு.

எழுதியவர் : பாலு (20-Mar-19, 1:56 pm)
சேர்த்தது : balu
பார்வை : 900

மேலே