தூக்கம்

இமைக்கதவைச் சாத்தியதும் தழுவிக் கொள்ள
***இதமாக நீவேண்டும் களைப்பை வெல்ல!
சுமைதாங்கு முள்ளத்தின் அழுத்தம் போக்கச்
***சுகமாக இரவினிலே வருவாய் காக்க !
குமுறவைக்கும் கவலைகளை மறக்கடிக்கக்
***குழைவாக மஞ்சத்தில் கருணை யோடே
அமைதியுடன் விடியுமட்டும் தாயைப் போலே
***அரவணைக்கும் தூக்கமேநீ என்றும் வாழி !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-Mar-19, 11:21 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 46

மேலே