நான் இன்றி
நீரோடும் நதிகள்
நீர்த்துப் போய்
நில குளிர் தேடிட
நெகிழி என்ற
நெய்யாத பையினால்
நெருக்கம் கொடுத்தாய்
வறண்ட வறட்டசிகளுக்கு
வான் மழை வேண்டி நிற்க
வாகன புகையால் மாசுபடுத்தினாய்...
சிறு துளியை
நீராவியாக்க
சிந்தனையின்றி
மரங்களை கொய்தெரிந்தாய்...
நான் இன்றி
நீ இல்லை என்பதனை
மறந்து தான் போனீரோ...?