முகிழ்த்தல்
நீராடும் நதியினில்
நீந்தும் போதினிலே
என் கண்கள்
உன்னை பார்க்கையிலே
உன் தாகம்
என்னை நோக்க
என் மோகம்
உன்னை சாய்க்க
முந்தானை மறைக்க
முகமறைத்து சென்றாயோ
கனவுகள் பிறக்க
காதலை கொடுத்தாயோ
காலைதான் தேங்கிநின்றேன்
காதல் தேடிவந்தேனே
மல்லி அவளை
மாலையில் அடைந்தேனே
அல்லியாய் மலர்ந்தவள்
அரசியாய் எழுந்தாளோ
தனியாக நின்றவள்
தளிராக மாறினாளோ
கனவுகள் கண்டேன்
காதல் கொண்டேனே
மயக்கம் கொண்டேன்
மாலை கண்டேனே