பொத்தி வச்ச ஆசைகள்
வளராத நகங்கள் எல்லாம்
வாயாலே வெட்டி விட்டு
உரையாடல் நீட்டிக் கொள்ள
ஆசை வைச்சேன்...
ஓயாத மழை நனைந்து
முந்தானை தலை துவட்டி
மார்போடு சேர்ந்துக் கொள்ள
ஆசை வைச்சேன்...
பூக்காத பூந்தோட்டத்தில்
வெண்ணிலா வெளிச்சம் ஏற்றி
பல்லாங்குழியில் தோற்க தான்
ஆசை வைச்சேன்...
என்றும் அன்புடன்,
மதன்