ஊடலால் உறவுகள் வலுத்திடும்

நாடி நின்றால் நடித்து நகர்ந்திடும்
தவிர்த்து விலகினால் தவமாய் நெருங்கிடும்
தணிந்து தாழ்ந்தால் தருக்கில் திமிறிடும்
செருக்கில் நிமிர்ந்தால் பாதம் பணிந்திடும்

வேண்டிக் கொடுத்தால் வெறுத்து ஒதுக்கிடும்
மறுத்துத் தடுத்தால் கையேந்தி கெஞ்சிடும்
அன்பில் அகவினால் அகந்தையில் அரற்றிடும்
ஆணையிட்டு ஏவினால் குழைந்து மண்டியிடும்

பாசமோ நேசமோ காதலோ காமமோ
அன்பின் அத்தனை பரிணாமங்களிலும்
எதிர்மறை வினைகளே எப்போதும் நிகழ்ந்திடும்-அதில்
உரிமையில் ஊடல்களாய் உறவுகள் வலுத்திடும்

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (23-Mar-19, 6:40 pm)
பார்வை : 228

மேலே