ஒரு தலை காதல்
ஒரு தலை காதல் 🌹
என் இதயத்தை கொள்ளை கொண்ட என் இதய ராணியே
உன்னையே நினைத்து ஏங்குது என் மனசு
உன் பெயர் சொல்லியே துடிக்குது என் உயிர் நாடி
உன் கடைக்கண் பார்வைக்கு தினம் ஏங்குகிறேன்
நீ என்னை பார்க்கும் போது தலை குனிகிறேன்
பயமா, வெட்கமா புரியவில்லை
எப்படி என் காதலை உன்னிடம் சொல்வது
தெரியவில்லை
அவஸ்தை தான்
மரண அவஸ்தை
இருந்தும் எப்போதும் உன் நினைவே, உன் கனவே
கண்ணாடி முன் நின்று
பலவாறு ஒத்திகை பார்த்தும்
அழகிய பாவை உன்னிடம் என் காதலை வெளிப்படுத்த தைரியம் இல்லை
தனிமையில் உன்னை அழகான சிலையாக ஓவியம் வரைந்தேன்
உன்னை நினைத்தால் கவிதை அருவியாக கொட்டுகிறது
ஆனால்
நேரில் முற்றிலும் ஊமை
ஆகி விடுகிறேன்
ஏன் இந்த தயக்கம்
ஏன் இந்த பயம்
இதுவரை உன்னை நேருக்குநேர் கண்களால் சந்திக்காத நான் ஏன் உன்னை காதலித்தேன்
மனம் ஆசை படுகிறது
அதே மனம் பயப்படுகிறது
முடிவுக்கு வந்து விட்டேன்
உன்னிடம் என் காதலை சொல்ல வேண்டாம் என்று
ஏன் என்று என் ஆழ் மனம் கேட்கிறது
ஒரு வேளை என் காதலை நீ ஏற்கவில்லை என்றால் என் நிலை
நிலைகுலைந்துவிடும்
தாழ்வு மனபான்மையின் உச்சம் நான்
தயக்கத்தின் பிள்ளை நான்
ஒரே ஒரு சொல் சொல்ல தெரியாத கோழை நான்
இப்போதும் கூறுவேன் உன்னை உளமார நேசிக்கிறேன்
தெரிகிறது, நன்றாக புரிகிறது
என் செய்வது
என் பிறவி அப்படி
மிகுந்த மனவலியுடன்
கண்ணீரில் இந்த வரியை எழுதுகிறேன்
"என் காதல் ஒரு தலையாக உன்னுடன் முடிந்தவரை தொடரும்...
வரலாறு சொல்லட்டும்
நான் ஒரு கோழை என்று
என் காதல் ஒரு தலை காதல் என்று".
- பாலு.