காதல் படிகள்
சின்ன சின்ன நெஞ்சாங்கூட்டில்
பிஞ்சு இதயம்
ஊஞ்சல் ஆடுமே...
அது காதல் சொல்லுமே...
ஒட்டி உரசி
சேர்த்த நேசம்
வாக்கு சேர்க்குமே...
மார்பில் தழுவி
நெஞ்சில் நழுவி
கலந்து கொள்ளுமே...
அது காதல் வெல்லுமே...
நீந்தி வந்து பொழிந்த சாரல்
மோகம் தீர்க்குமே...
காத்திருந்து வரைந்த கோலம்
சங்கிலி இட்டு
ஜனித்து வளருமே...
அது காதல் உச்சமே!
என்றும் அன்புடன்,
மதன்