நெஞ்சிலே பூ வண்ணமா

சிறகும் இல்லை
சிட்டுக் குருவி
பெயரும் இல்லை
காற்றிலே பறக்கிறேன்
மாயமென்ன...
கண்ணம்மா...கண்ணம்மா...

பருத்தி வாய் வெடித்து
பரவசம் நீ திரிக்க
பக்கவாதம் வந்ததென்ன...
கண்ணம்மா...கண்ணம்மா...

உன் ஐவிரல்கள்
என் விரல்கோர்க்க
விடுதலை தந்தால்
மண் வாசம் நாசி மறுக்கும்
நிலையென்ன...
கண்ணம்மா...கண்ணம்மா...

என்றும் அன்புடன்,
மதன்

எழுதியவர் : மதனகோபால் (24-Mar-19, 8:52 pm)
சேர்த்தது : மதனகோபால்
பார்வை : 234

மேலே