ஜாம் பஜார் ஜக்கு

#ஜாம்பஜார் ஜக்கு

போடி.. வாடி.. என்று
"டி" போட்டு
அதிகார தோரணையில்
கணவர் பேசும் போது

எப்போதோ
தூர் தர்ஷன் நாடகத்தில்
சோ பேட்டை பிஸ்தாவாய்
பேசிய வசனமும் காட்சியும்
கண்முன் தோன்ற
அதே பாணியில்
நைட்டியை சிறிது மேலுக்கு வரிந்து கட்டி
இடுப்பில் இரண்டு கைகளை
வளைத்து வைத்து
உடலை நாசுக்காய்
ஆட்டி ஆட்டி
"இப்ப இன்னான்ற...
ஜாம்பஜார் ஜக்கு தெரியுமா..?
ஜாம்பஜார் ஜக்கு"
என்று கேட்டு
நடிகர் சோ போன்று
மாறி வசனம் பேசுகையில்

இவளுக்கு என்ன ஆயிற்று.?

என்று
பேந்த.. பேந்த.. விழிக்கும்
கணவரை இரசிப்பதிலும்
சுகம் இருக்கத்தான் செய்கிறது. !

#சொ. சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (25-Mar-19, 10:13 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 44

மேலே