வானவில் நிற சேலைகள்
வளையல் கரங்கள் இன்று
வண்ண கயிறுகளால் மின்ன
வானவில் நிற சேலைகள்
அழகான கவுனாய் மாறி கொள்ள
மலர் சூட்டும் கருங்கூந்தல்
மடை திறந்த வெள்ளமாய் காற்றில் ஆட
இடையில்லா பெண்கள் வளர்ச்சி
எங்கும் பெருகி எழுச்சி கொள்ள
பாசம் உருவாகும் மங்கை மனதில்
பாம்பின் நஞ்சு குதிராக உருவாக
பண்டித்துவம் பெற்ற அழகு நங்கை
சண்டித்துவம் செய்யத் துவங்க
கண்டித்தல் தண்டித்தல் திசை மாறி விலகல் எல்லாம்
கனம் பொருந்திய காலத்தின் கையால் .
--- நன்னாடன்.