என் உயிரே

என் உயிரே.....

சிந்தையில் நிறந்திரமாக கலந்துவிட்ட என் உயிரே!
உன்னை ஒரு நொடி பொழுதும் மறக்க இயலாது
தூக்கத்தில் இயல்பாக மறக்க நினைத்தாலும்
கனவில் வந்து அன்பு தொல்லை தருகிறாய்
அதுவும் என் காதலி கனவில் வந்து விட்டாள் போதுமே
கவிதை மழையாய் பொழிகிறாய்
உன் இளமை மாறா சொற்களால்
என் காதலியை கிறங்கடித்தேன்
காதலிலும் வெற்றி கண்டேன்.
ஆயிரம் பேர் அடங்கிய அரங்கில்
நீ என் நாவில் வர்ண ஜாலங்கள் புரிந்ததால்
அரங்கமே அதிர்ந்தது, ஆர்பரித்தது, கரகோஷம் வின்னை பிளந்தது.
அமைச்சர் பெருமான் அழைத்தார்
ஆளுங்கட்சியில் அமர்தினார்
அரசியல் பிரவேசம் இனிதே ஆரம்பம்.
அஞ்சா நெஞ்சனாக குரலை உயர்த்தி
எதுகை மோனையுடன் தங்கு தடையின்றி ஏற்ற இறக்கத்துடன் தெளிந்த நீரோடையன
சங்கத்தில் ஆரம்பித்து
இன்றுவரை எழுச்சி உரை ஆற்றினேன்.
கூட்டம் பலமாக கைதட்டியது
பாராட்டு மழையில் நினைத்தேன்
குதுகுலம் அடைந்த கூட்டம்
அடுத்த தலைவன் நான் தான் என்று அடையாளம் காட்டியது.
விரைவில் அரியனையில் ஏற போகும் நான் எப்படி உனக்கு நன்றி உறைப்பேன்
என் உடலில், என் உயிரில், என் நடை உடை பாவனையில் கலந்துவிட்ட என் இன்ப தமிழே, அமுதே, முக்கனி சுவையே,
இளந்தென்றலே, குளிர் நிலவே, செம்மொழியே, உலக மொழிகளில் மூத்த மொழியே,உண்ணத தமிழே, உயிர் மூச்சே,
நீ ஒரு பெருங்கடல்!
அந்த கடலில் நான் கற்றது ஒரு துளி. துளியை கடலாய் பாவித்து வாழ்கிறேன்.
நன்றி தமிழே நன்றி !
உனக்கு பல கோடி நன்றி !
உனக்காக என் உயிரையும் விட தயார்!
அரசியல்வாதியாக கூறவில்லை
உன் அடியேன் தாசனாக கூறுகிறேன்!
உன் பித்தனாக சொல்கிறேன்.
வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!
- பாலு.

எழுதியவர் : பாலு (28-Mar-19, 7:14 am)
சேர்த்தது : balu
Tanglish : en uyire
பார்வை : 1018

மேலே