கரிசல் காரிகைகள்

நிழல் ஓவியங்கள்
நிதர்சனம் மறைத்தன
அச்சம் தரித்தன
நாணம் நிழலாட
மடமை தழைத்தோங்க
நிழல் சுவைத்த
ஞாயிறு வெம்மையில்
கருமையை வெளுமையாக்கும்
முயற்சிகளில் தோற்ற
மானுடங்களின் ஊடே
வெம்மையை சுவையென கருதி
காதறுந்த காலணியுடன்
கரிசல் காட்டில் அவள் பயணம்...
தன் தளிர்கள்
தரிசாக இருந்திடவேண்டாமே என...

எழுதியவர் : சா.மனுவேந்தன் (29-Mar-19, 7:44 am)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 158

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே