என் உடன்பிறப்பே【 ய் 】

பார்க்கும் போதெல்லாம்
பற்றிக்கொள்ளும் சண்டைகள் ...
பேசும்போதெல்லாம்
தீவிரமாகிவிடும் வார்த்தைகள் ...
கைகள் படும்போதெல்லாம்
கைகலப்பாகிவிடும் போர்கள் ....
கண்கள் பார்க்கும்போதெல்லாம்
கட்டிடமாய் வளர்ந்திடும் கருத்துக்கணிப்புகள் ...
சிறுகோபத்திலும் உடைந்துபோகும் பல பொருட்கள் ...
சேர்ந்து செய்யும் பிழையில் ஒருபோதும்
விட்டுக்கொடுக்காத ஒத்துழைப்புகள் ...
ஆயிரம் சண்டைகள் என்ன
பல லட்சம் சண்டையிடுவோம் ..
ஆனால் ,
ஒருபோதும் மாறிடாது அன்பு ....
வந்ததும் வாக்குவாதம் ,
பேசியதும் போராட்டம் ,
இவையாவும் நிலையில்லையே
உடன்பிறப்புகளிடம் .....
நான் உறங்கியது அறியாது
கன்னங்களை பிடித்து
நெற்றியிலிட்ட முத்தத்தில் கலந்தது அன்பு ,
தூக்கம் கலைந்தும் நான் வெளிப்படுத்தாமல்
மனதில் புன்னைகைத்த நிமிடங்கள் ,
மறுநாள் காலையில் கேட்டால்
எதுவும் பேசாமல் மீண்டும் கோபமாய்
நடித்த அவன் நாடகம் ....

சொல்லாத அன்பு ...
உணர்வுகள் ஆயிரம் மொழி பேசும் ....

எழுதியவர் : Deepikasukkiriappan (28-Mar-19, 8:12 pm)
பார்வை : 910

மேலே